Math, asked by tkmm, 10 months ago

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் - இதில் பயின்று வரும் அணியைக் கூறி விளக்கம் தருக.​

Answers

Answered by amlan8643
3

Step-by-step explanation:

பொறையுடைமை :  (பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்தல்)

குறள் 1 :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள் :

நிலமானது, தன்னைத் தோண்டுபவரையும் தாங்குவதுபோல, நம்மை

இழிவுபடுத்துவோரையும் நாம் பொறுத்துக்கொள்வதே சிறந்த பண்பு.

சொற்பொருள் :

அகழ்வாரை – தோண்டுபவரை.

இகழ்வார் – இழிவுபடுத்துவோர்.

தலை – சிறந்த பண்பு.

இலக்கணக்குறிப்பு :

பொறுத்தல் – தொழிற்பெயர்.

அகழ்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்கள்.

பகுபத உறுப்பிலக்கணம் :

அகழ்வார் = அகழ் + வ் + ஆர். அகழ் – பகுதி, வ் – எதிர்கால

இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

அணி :

உவமையணி.

குறள் 2 :

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

பொருள் :

பிறர் செய்யும் துன்பத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ளுதல்

சிறந்தது. அதனைவிடச் சிறந்தது அத்துன்பத்தை மறந்துவிடுதல்.

சொற்பொருள் :

பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்.

இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை.

Similar questions