India Languages, asked by ammubalachandar2002, 1 year ago

இலக்கிய நயம் பாராட்டுக. (மையக் கருட்துடன் ஏதேனும் மூன்று நயம்
மட்டும்)
இறைக்கின்ற கிணற்றில் நீர் சுரப்பதைப்போல்
இரத்தத்தைக் கொடுப்பதனாற் குருதி ஊறும்!
அரைக்கின்ற சந்தனந்தான் மணப்பதைப்போல்
அளிப்பதனாற் குருதியது தூய்மையாகும்!
தருகின்ற குருதியதே உயிரைக்காக்கும்
தன்னுடலுக் கூறேதும் நேர்ந்திடாது!
குருதிக்கொடை ஒன்றேதான் கொடையுள் மேலாம்
குவலயத்துள் இதுபோன்ற கொடையொன்றில்லை!​

Answers

Answered by rrajshomu
10

Answer:

மையக் கருத்து:

கிணற்றில் நீர்,சந்தனத்தின் மணம்,உயிரைக் காக்கும் என்று குருதியின் அருமை பெருமைகளை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.

மோனை நயம்:

இறைக்கின்ற-இரத்தத்தை

எதுகை நயம்:

தருகின்ற-குருதிக்கொடை

அணி நயம்:

இப்பாடலில் உவமை நயம் இடம்பெற்றுள்ளது

Answered by mathin9
8

Explanation:

திரண்ட கருத்து:

நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.

அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மையக்கருத்து:

பொதிகை மலையின் இயற்கைப் பேரழகு, தமிழ் வளர்த்த மலை, அருவி சூழ்ந்த மலை மேகங்கள் தவழும் மலை எனப் பொதிகையின் அழகைக் குமரகுருபரர் மையமாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார். மோனை நயம்:

செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:

தங்கு முகில் – தமிழ் முனி

அங்கயற்கண்ணி – அருள் சுரந்து

எதுகை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:

திங்கள் – தங்கு

அங்கயற் – பொங்கருவி

அணி நயம்:

பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:

அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

சான்று:

சூடு மலை, யாடு மலை, வாழு மலை

முடிவுரை:

குமரகுருபரரின் இப்பாடல் இன்பம் தரும் இன்சுவையுடன் அமைந்து பொதிகை மலையின் புகழைப் பறைசாற்றுகிறது. இது போன்ற பாடல்களைப் படித்து இன்புறுவாமாக.

Similar questions