இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் த௬௧.
'நல்லது செய்த லாற்றீ ராயினும் |
அல்லது செய்தல் ஓம்புமின்'
Answers
Answer:
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
இடம் சுட்டுக :
இவ்வடிகள் பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறை அமையப் பாடிய புறநானூற்றுப் பாடல். இப்பாடலை இயற்றியவர் நரிவெரூஉத்தலையார்.
பயனில்லாத முதுமைப்பருவம் எய்தியவர்களை விளித்து, அவர்களுக்கு நல்லாற்றுப் படுத்தும் நெறி எஃது என அறிவுறுத்தும் போது அவர் இவ்வடிகளைக் கூறுகிறார்.
பொருள் :
வாழும் போது நல்லதை மட்டும் செய்யுங்கள். அது இயலாவிட்டால் தீயணவற்றைச் செய்தலையாவது கைவிடுங்கள்.
விளக்கம் :
மீன் முள்ளைப் போல நரை முதிர்ந்து, தோல் சுருங்கி, முதுமை அடைந்தும் பயனில்லை.
நிலையில்லாத உடம்பு நிலைத்துள்ள போதே நிலையானதைத் தேடிக் கொள்ள வேண்டும்.
நீர், கூரிய மழுவாகிய ஆயுதத்தினை ஏந்திய வலிமை வாய்ந்த எமன் உம் உயிர் கவர வரும்போது வருந்திப் பயனில்லை.
உயிருடன் வாழும் போது நல்லதை மட்டும் செய்யுங்கள். அது இயலாவிட்டால் தீயணவற்றைச் செய்தலையாவது கைவிடுங்கள்.அதுவே எல்லோரும் விரும்புவது.
அதுவே மறுமையில் உம்மை நற்கதி சேர்க்கும் வழியுமாகும் என்று முதுமையுடையாரிடம் நரிவெரூ௨த்தலையார் தனிமனிதனுக்கும் உலகிற்கும் சிறந்த மெய்ப்பொருளைக் கூறியுள்ளார்.