India Languages, asked by tamilhelp, 1 year ago

ஓவியக்கலை தமிழகத்தில்‌ சிறந்திருந்தது என்பதை விளக்குக.

Answers

Answered by anjalin
0

Answer:

ஓவியக்கலை:

  • தமிழகத்தில் ஓவியக்கலை  உயர்ந்த நிலையைப்‌ பெற்றிருந்தது. உலகில்‌ காணும்‌ உயிருள்ள, உயிரில்லா எல்லாப்‌ பொருள்களையும்‌ தங்கள்‌ கற்பனையால்‌ காணப்பெற்ற பொருள்களையும்‌ அவ்வவற்றின்‌  உருவங்கள்‌ போலத்‌ தோன்றுமாறு தமிழ்நாட்டு ஓவியர்கள்‌ ஓவியங்களாய்த் ‌தீட்டினர்‌.  
  • அவர்கள்‌ ஓவியத்தை வெறும் தொழிலாக கருதாமல்‌ ஒரு யோகக்‌ கருவியாகவே கருதினர்‌.

7 ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ ஓவியக்கலை:

  • தமிழ்நாட்டில்‌ இன்று நாம்‌ காணும்‌ ஓவியங்களுள்‌ மிகவும்‌  தொன்மையானவை பல்லவப்‌ பெருமன்னர்‌ காலத்தவையாகும்‌.
  • ஏறத்தாழ கி.பி. 7 ஆம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்திலிருந்துதான்‌ ஓவியங்கள்‌ காணப்படுகின்றன.
  • இவற்றிற்கு முற்பட்டவை காலப்போக்கில் அழிந்தும்‌ மறைந்தும்‌  போயின.

ஓவியத்துறையில்‌  பல்லவரின் பங்கு:

  • ஓவியத்துறையில்‌ பல்லவ மன்னர்கள்‌ பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்‌. பல்லவ மன்னர்‌ மகேந்திரவர்மன் ஓவியக்கலையில்‌ சிறந்து விளங்கியவன்‌.
  • சோழ மன்னர்கள் ஓவியக்கலைப்பணியில்‌ அதிகமாக ஈடுபட்டிருந்தனர்‌.

கோவில்களில்‌ ஓவியம்‌ :

  • தமிழ்‌ மன்னர்‌ வளர்த்த ஓவியங்களை அவர்‌ எழுப்பித்த கோவில்களின்‌ நுழைவாயிலின்‌ இரு பக்கங்களிலும்‌ கருவறைச்‌ சுவா்களிலும்‌ பிரகாரங்களிலும்‌ விதானத்திலும்‌ தீட்டினர்‌.
  • அவர்களால்‌ தீட்டப்பெற்ற ஓவியங்களை மாமண்டூர்க்‌ குகைகளின்‌ வெளிமண்டபத்திலும்‌ காஞ்சி கைலாசநாதர்‌ கோவில்‌, பனமலைக்‌ கோவில்‌, தஞ்சைப்‌ பெருவுடையார்‌ கோவில்‌ முதலிய பல இடங்களிலும்‌ காணலாம்‌.

Similar questions