இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி' கதையின் மூலமாக விளக்குக.
Answers
Answer:
முன்னுரை:
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.
வித்வானின் வருகையும், அறிமுகமும்:
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.
Explanation:
வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீதகுழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
கீர்த்தனம் தொடங்கினார்:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.
போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.
முடிவுரை:
நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.
இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.