வள்ளல்களை இலக்கியங்கள் போற்றியமைக்கு இரண்டு எடுத்துக்காட்டூகள் எழுதுக.
Answers
Answered by
1
Answer:
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
Answered by
1
வள்ளல்களை இலக்கியங்கள்:
- வீரத்தை போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. செல்வத்தின் பயனே ஈதல் என்று நக்கீரன் குறிப்பிட்டுள்ளார். கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது பழந்தமிழர் கொடை மாட்சியை புலப்படுத்துகிறது.
- எழுவரின் கொடை பெருமை சிறுபாணாற்றுப் படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.
- புற இலக்கியங்களில் மட்டும் இன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றி செய்திகள் இடம் பெற்றுள்ளன. வள்ளல்கள் "பசிப்பிணி மருத்துவன்", "இல்லோர் ஒக்கல் தலைவன்" என்றெல்லாம் போற்றப்பட்டனர்.
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்.
- வள்ளல்கள் மட்டுமின்றி புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது.
Similar questions
India Languages,
6 months ago
Accountancy,
6 months ago
Geography,
6 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Hindi,
1 year ago