India Languages, asked by tamilhelp, 9 months ago

பல்துறை வளர்ச்சியில்‌ மொழிபெயர்ப்பின்‌ பங்கினைக்‌ குறிப்பிடுக.

Answers

Answered by anjalin
4

பல்துறை வளர்ச்சியில் மொழி பெயர்ப்பின் பங்கினை குறிப்பிடுக.  

  • இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு தேவைபடுகிறது. மொழி பெயர்ப்பு இல்லையெனில் உலகை எல்லாம் வலையாக பிடித்திருக்கிற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை.
  • தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழி பெயர்ப்பால் தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழி பெயர்ப்பு தேவைபடுகிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் ஆகியன வேற்று மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன.
  • இதனால் புது வகையான சிந்தனைகள் மொழி கூறுகள் பரவுகின்றன. மொழிகளுக்கு இடையே ஆன வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்க விடாமல் ஒற்றுமை படுத்த உதவுவது மொழி பெயர்ப்பு ஆகும்.
  • நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையை தருவது மொழி பெயர்ப்பு ஆகும்.

Similar questions