விருந்தை எதிர்கொள்ளும் தன்மை குறித்துக் குறுந்தொகையும் கொன்றைவேந்தனும் பதிவு
செய்துள்ள கருத்துகள் யாவை?
Answers
Answered by
25
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை குறி்த்து குறுந்தொகையும் கொன்றைவேந்தனும் பதிவு செய்துள்ள கருத்துகள்
- இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ
என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.
கொன்றைவேந்தன் பதிவு செய்துள்ள கருத்துகள்:
" மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"
என்று கொன்றைவேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.
- சங்க காலத்தில் இருந்தே அரசராயினும் வரியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
- வீட்டிற்கு வந்தவர்களுக்கு வறிய நிலையிலும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
Answered by
0
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ
என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.
கொன்றைவேந்தன் பதிவு செய்துள்ள கருத்துகள்:
" மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"
என்று கொன்றைவேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்.
சங்க காலத்தில் இருந்தே அரசராயினும் வரியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு வறிய நிலையிலும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்
Similar questions