தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் - இது யார் கூற்று? விளக்குக.
Answers
Answered by
12
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
- தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று கூறியவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.
- இவரை சிலம்புச் செல்வர் என்றும் போற்றுவர். இவர் ஒரு விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1906 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
- இவர் தமிழரசு கழகத்தைத் தொடங்கியவர் ஆவார். 1966 ஆம் ஆண்டு வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் இவருடைய நூலக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைந்துள்ளது. 1906 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் சால்வன்குப்பம் என்னும் பகுதியில் இவர் பிறந்துள்ளார்.
Answered by
6
Answer:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி
என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன்
தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர
மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து
ம.பொ.சி. கூறிய கூற்று இது.
விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு
கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின்
தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார்.
25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற
உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின்
சார்பில் வெளியிட்டார்.
Explanation:
all tamil students it is the simple explation
Similar questions