India Languages, asked by tamilhelp, 1 year ago

மலைபடுகடாம்‌, ஆற்றுப்படை - இவற்றின்‌ பெயர்க்‌ காரணங்களை எழுதுக.

Answers

Answered by anjalin
1

மலைபடுகடாம் :

மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் ஆவார். இது நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது ஆகும்.  

ஆற்றுப்படை :

ஆற்று படுத்தும் கூத்தன் வள்ளலை நாடி எதிர் வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப் படை ஆகும்.  

Similar questions