India Languages, asked by tamilhelp, 1 year ago

வலுப்பெறுதல்‌ என்றால்‌ என்ன ?

Answers

Answered by Anonymous
1

வலுப்படுத்துவது என்பது எதையாவது வலுவானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ ஆக்குவது அல்லது வலுவானதாகவோ அல்லது மிகவும் பயனுள்ளதாகவோ மாறுவது

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

Answered by anjalin
1

வலுப்பெறுதல்‌:

தாவரத்‌ திசு வளர்ப்பில்‌ பல்வேறு தொழில்நுட்பமுறைகள்‌ பின்படுத்தப்படுகின்றது. அவற்றில்‌  முக்கியமான ஒன்றாக வலுப்பெறுதல்‌ (அ) வன்மையாக்குதல்‌ உள்ளது.

  • ஆய்வகச்‌ சோதனை முறையில்‌ வளர்க்கப்பட்ட நாற்றுக்களுக்கு வலிமை பெறும்‌  காலம்‌ தேவைப்படுவதால்‌ அவை பசுமை இல்லம்‌ அல்லது வன்மையாக்கி அறைக்கும்‌,  பின்னர்‌ இயற்கை சூழலுக்கும்‌ மாற்றப்படுகின்றன.
  •  வன்மையாக்குதல்‌ என்பது ஆய்வகச்‌ சோதனை முறையில்‌ ஈரப்பதமான அறையில்‌  உருவாகப்பட்ட நாற்றுக்களை ஒளியின்‌ இயற்கையான களச்‌ சூழலில்‌ வளர்வதற்கு  ஏற்ப படிப்படியாக வெளிக்கொணர்தல்‌ ஆகும்‌.

  • இதன்‌ படிநிலைகளாவன, முதல்‌ இந்த தாவரங்கள்‌ ஊட்டச்சத்து ஊடகங்களிலிருந்து  வெளியே எடுத்து தண்ணீரில்‌ நன்கு கழுவப்படுகின்றன. பின்னர்‌ இந்த தாவரங்கள்‌  திரவ ஊட்டச்சத்து ஊடகம்‌ நிரப்பட்ட வலையுள்ள பிளாஸ்டிக்‌ தொட்டிகளில்‌ வளர்க்கப்பட்டு 6 முதல்‌ 8 வாரங்களுக்கு பசுமை இல்லத்தில்‌ வைக்கப்படுகின்றன.  இது முதன்மை கடினப்படுத்துதல்‌ எனப்படும்‌.
  •  பின்னர்‌, தாவரங்கள்‌ பூச்சட்டி கலவையால்‌ நிரப்பப்பட்ட பாலிபேக்குகளுக்கு  மாற்றப்பட்டு 6 முதல்‌ 8 வாரங்களுக்கு நிழல்‌ கொண்ட வீட்டின்‌ கழ்‌  வளர்க்கப்படுகின்றன. இந்நிகழ்வு இரண்டாம்‌ நிலை கடினப்படுத்துதலாகும்‌.
  • இரண்டாம்‌ நிலை கடினப்படுத்துதலுக்கு பிறகு தாவரங்கள்‌ விவசாய நிலங்களில்‌  வளரக்‌ கூடியவையாகின்றன.
Similar questions