India Languages, asked by tamilhelp, 1 year ago

"உயிர்‌ தொழில்நுட்பவியலில்‌ தாவர திசு வளர்ப்பு முறை மிக முக்கியமான
முன்னுரிமை பெறும்‌ அறிவியல்‌ துறையாக விளங்குகிறது. தாவர திசு வளர்ப்பின்‌
அடிப்படை கருத்துகளை எழுதுக."

Answers

Answered by AdorableStuti
1

Answer:

Write in hindi or english

Answered by anjalin
0

தாவர திசு வளர்ப்பு:

  • தாவர திசு வளர்ப்பு என்பது ஆய்வுக்கூடச் சோதனை வளர்ப்பு முறை மற்றும் நுண்ணுயிர் நீக்கியநிலையில் திசு வளர்ப்பு ஊடகத்தில் ஏதேனும் தாவரப் பகுதிகளை வளர்த்தலாகும்.
  • இத்தொழில்நுட்பச் செயல்முறையானது மூன்று அடிப்படை செயல்பாடுகளை கொண்டுள்ளது.
  • தேவையான தாவரப்பகுதி (அல்லது) அதன் பிரிகூறு தேர்வு செய்யப்பட்டு, இதர உடல் பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
  • பிரித்தெடுக்கப்பட்ட தாவரத்தின் பகுதியானது, கட்டுப்படுத்தப்பட்ட இயற்பியல் சூழ்நிலையிலும், வரையறுக்கப்பட்ட வேதிய (ஊட்ட ஊடகம்) சூழலிலும் பராமரிக்கப்படுகிறது.

பிரிகூறு

  • பிரிகூறு என்பது தேர்தெடுக்கப்பட்ட தாவரத்தை உருவாக்குவதற்கு வளர்ப்பு ஊடகத்தில் வைத்து வளர்க்கத் தேவைப்படும் தாவரத்திசுவாகும்.

அடிப்படை கொள்கைகள்:

தாவரத் திசு வளர்ப்பின் அடிப்படைக் கருத்துகளாவன,

  1. முழுத்திறன் பெற்றுள்ளமை,
  2. வேறுபாடு அடைதல்,
  3. மறுவேறுபாடு அடைதல்
  4. வேறுபாடு இழத்தல் போன்றவையாகும்.

முழுத்திறன் பெற்றுள்ளமை:

  • உயிருள்ள எந்தவொரு தாவர செல்லும் முழுதாவரமாக வளர்ச்சி பெறுவதற்காக இயற்கையாகவே அமைந்த திறனே ஆகும்.
  • இது தாவர செல்லுக்கு மட்டுமே அமைந்த பண்பாகும்.

வேறுபாடு அடைதல்:

  • ஆக்குத்திசுவானது தனித்திசுவாகவோ அல்லது கூட்டுத் திசுக்களாகவோ வேறுபாடு அடைவதாகும்.
  • செல்களில் உயிரி வேதியிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவற்றை சிறப்பான அமைப்பு மற்றும் பணியினை மேற்கொள்ளச் செய்தலாகும்.

மறுவேறுபாடு அடைதல்:

  • ஏற்கனவே, வேறுபாடுற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதலாகும்.  

எடுத்துக்காட்டாக, வேறுபாடு அடையாத காலஸ்திசு தண்டு மற்றும் வேர்திசுவாக வளர்ச்சி அடைவதாகும்.

வேறுபாடு இழத்தல்:

  • முதிர்ந்த திசுக்கள் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறி காலஸ் திசுவாக வளர்ச்சி அடைவது வேறுபாடு இழத்தல் ஆகும்.
  • உயிருள்ள தாவர செல்களின், திசுக்களின் வேறுபாடுறுதலும், வேறுபாடு இழத்தலும் உள்ளார்ந்த ஒரு சேரக் காணப்பட்டால் அவை முழு ஆக்குத்திறன் பெற்றதாக கருதப்படும்.

Similar questions