பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாட்டின் ஒழுக்க அட்டவணையை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
can you please translate it in English?
Answered by
2
- பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாடானது நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்பட்டு இயற்கை முறையில் உருவான வகைப்பாடு ஆகும்.
- இவ்வகைப்பாட்டில் தாவரங்கள் பற்றிய விளக்கங்கள் தெளிவாகவும், முழுமையாகவும் மற்றும் சரியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்வகைப்பாட்டின் மூலமாக தாவரங்களை எளிமையாக இனங்கண்டறிய முடியும் மற்றும் தற்காலிக மரபுவழி கொள்கைகளுக்கு இவ்வகைப்பாடானது ஒத்தமைந்துள்ளது மற்றும் இவ்வகைப்பாட்டில், பூக்கும் தாவரங்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- இவ்வகைப்பாட்டில் 97,205 சிற்றினங்கள் 202 குடும்பங்களாக தாவரங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டினை இந்தியா, இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகள் பின்பற்றுகின்றன. உலகில் உள்ள பல ஹெபேரியங்கள் மற்றும் பல தாவரத் தோட்டங்களில் இவ்வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது.
பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாடு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
துணைவகுப்பு -1 பாலிபெட்டாலே
- வரிசை-1 தலாமி புளோரே (6 துறைகள் மற்றும் 34 குடும்பங்கள்)
- துறை: மால்வேல்ஸ்;, குடும்பம்: மால்வேசி
- வரிசை-2 டிஸ்கி புளோரே (4 துறைகள் மற்றும் 23 குடும்பங்கள்)
- வரிசை-3 காலிசி புளோரே (5 துறைகள் மற்றும் 27 குடும்பங்கள்)
துணைவகுப்பு -2 கேமோபெட்டாலே
- வரிசை-1 இன்பெரே (3 துறைகள் மற்றும் 9 குடும்பங்கள்)
- வரிசை-2 ஹெட்டிரோமிரே (3 துறைகள் மற்றும் 12 குடும்பங்கள்)
- வரிசை-3 பைகார்பெல்லேட்டே (4 துறைகள் மற்றும் 24 குடும்பங்கள்)
துறை: பாலிமோனியேல்ஸ், குடும்பம்: சொலனேசி
துணைவகுப்பு -3 மானோக்ளமைடியே
- 8 வரிசைகள் மற்றும் 36 குடும்பங்கள்
- வரிசை: யூனிசெக்சுவேல்ஸ், குடும்பம்: யூபோர்பியேசி
Similar questions