India Languages, asked by tamilhelp, 1 year ago

"கார்போஹைட்ரேட்டு மற்றும்‌ காற்றிலா சுவாசத்தின்‌ சுவாச ஈவு -
விளக்குக."

Answers

Answered by MIGHTYAVENGER
0

Answer:

ask in english brother

Answered by anjalin
0

கார்போஹைரேட்டின் சுவாச ஈவு:

             

            C6H12O6 + 6O2 -> 6O2 + 6H2O + ENERGY

                                6 மூலக்கூறு CO2

சுவாச ஈவு =     -----------------------------------     =  1

                                6 மூலக்கூறு O2

காற்றில்லா சுவாசம்:  

  • அனரோபயாசிஸ் அல்லது காற்றில்லா உயிர்ம்பு என்பது ஆக்சிஜன் இல்லாத நிலையில் உயிர் வாழ்வதாகும்.
  • சில நுண்ணுயிர்கள் ஆக்சிஜன் இன்றியே உயிர்வாழ கூடியவையாகும்.
  • தனி ஆக்சிஜன் மூலக்கூறுகள் இன்றியே நடைபெறும் சுவாசித்தல் நிகழ்வு ‘காற்றில்லா சுவாசம்” எனப்படும்.
  • இச்சுவாசமானது, ஈஸ்ட் மற்றும் சில பாக்டீரியாக்களில் நடைபெறுகின்றது. இந்நுண்ணுயிர்களானது காற்றில்லா சுவாச உயிர்கள் என்றழைக்கப்படுகின்றன.
  • கிளைக்காலிசிஸ் மட்டுமே இந்த நுண்ணுயிர்களில் நடைபெறுகின்றது.
  • இதில் குளுக்கோசானது இரண்டு பைரூவிக் அமில மூலக்கூறுகளாக மாறும் நிகழ்வு கீழ்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது:

                      C6H12O6 + 2NAD+  -> 2C3H4O3 + 2NADH2

  • காற்றில்லா சுவாசத்தில் ஆற்றலை வெளிப்படுத்த சுவாச தளப்பொருள் முழுவதுமாக ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை.  
  • குளுக்கோஸ் சிதைவுற்று இரு பைரூவிக் அமிலங்கள் உருவாகின்றன.
  • இந்த வைரூவிக் அமிலமானது மேலும் எத்தில் ஆல்கஹாலாக மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களாக மாற்றமடைகிறது.  
  • காற்றில்லா சுவாசத்திற்கு, நொதித்தல் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

காற்றில்லா சுவாசத்தின் சுவாச ஈவு:

  • காற்றில்லா சுவாசத்தில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.
  • ஆனால், ஆக்சிஜன் பயன்படுத்துவது இல்லை. எனவே, காற்றில்லா சுவாசத்தின் ஈவு முடிவற்றதாக உள்ளது.

எடுத்துக்காட்டாக,

             C6H12O6 + 2 NAD+ -> 2 C2H5OH + 2CO2 + ENERGY

குளுக்கோஸின் காற்றில்லா சூழிலில் சுவாச ஈவு

                      2 மூலக்கூறு CO2

        =           -----------------------------------

                     சுழி மூலக்கூறு O2

Similar questions