India Languages, asked by tamilhelp, 11 months ago

உலகளாவிய உயிரியப்‌ பல்வகைமை பாதுகாப்புத்‌ திட்டங்களை எழுதுக.

Answers

Answered by sarvani62
0

Answer:

Tamil

Explanation:

this

is

tamil language

Answered by anjalin
0
  • உயிரியப் பல்வகைமை என்பது நிலம், கடல், நன்னீர் என அனைத்து சூழ்நிலை மண்டலங்களில் வாழும் உயிரினங்களில் காணப்படும் வேற்றுமை மற்றும் அங்கனத்தினர்களாக உள்ள சூழ்நிலை மண்டலங்களின் வேறுப்பட்ட தன்மையாகும்.
  • உயிரிய பல்வகைமை மூன்று வகைப்படும். அவையாவன,  
  1. மரபிய பல்வகைமை,
  2. சிற்றின பல்வகைமை
  3. சூழ்நிலை மண்டல பல்வகைமை ஆகும்

உலகளாவிய பாதுகாப்புத் திட்டங்கள்:

  • அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான பாரம்பரியச் சொத்தாகக் கருதி உயிரியப் பல்வகைமைப் பாதுகாக்கப்படவேண்டும்.  
  • பூமி முழுவதும் காணப்படும் உயிரிய மிகைப் பல்வகைமை இடங்களைப் பாதுகாப்பது ஒர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டமாகும்.
  • இவ்விடங்கள் அதிக எண்ணிக்கையில் ஒரிட நிலை இனங்கள் கொண்டும், வழக்கத்திற்கு விரோதமாக மிக வேகமாக வாழுமிடங்களில் மாறுபாடுகள் தோன்றும் இடங்களாகும்.
  • உலகம் முழுவதும் 25 உயிரிய மிகைப்பல்வகைமை இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • உலகிலுள்ள 12 உயிரிய மிகைப்பல்வகைமை மண்டலங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • 1994-ஆம் ஆண்டு மே மாதம் ஏற்படுத்தப்பட்ட ‘உலகளாவிய உயிரியப் பல்வகைமை ஒப்பந்தத்தில்” இந்தியாவும் ஒர் உறுப்பினர் நாடாகும்.  
  • ‘தேசிய உயிரியப் பல்வகைமை செயல் திட்டத்தை” உருவாக்கி செயல்படுத்தச் சுற்றுசூழல் மற்றும் காடுகளுக்கான மத்திய அரசு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Similar questions