India Languages, asked by tamilhelp, 11 months ago

ஆண்டிபாடிகளின்‌ முக்கிய பணிகள்‌ யாவை ?

Answers

Answered by lilyrose
0

hey mate,

ஆன்டிபாடிகள் மூன்று முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளன: 1) ஆன்டிபாடிகள் இரத்தம் மற்றும் சளிச்சுரப்பிற்குள் சுரக்கப்படுகின்றன, அங்கு அவை நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுகள் (நடுநிலைப்படுத்தல்) போன்ற வெளிநாட்டுப் பொருட்களுடன் பிணைக்கப்பட்டு செயலிழக்கச் செய்கின்றன. 2) ஆன்டிபாடிகள் பாக்டீரியா செல்களை லிசிஸ் மூலம் அழிக்க நிரப்பு முறையை செயல்படுத்துகின்றன (செல் சுவரில் துளைகளை குத்துகின்றன).

Answered by anjalin
0

எதிர்ப்பொருள் (அ) ஆண்டிபாடி

  • எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகளே எதிர்பொருள்கள் அல்லது இம்யுனோகுளோபின் எனப்படும்.
  • எதிர்பொருள் தூண்டிகளை திரிபடைய செய்தல், வீழ்படிவாக்குதல், அவற்றின் நச்சை சமநிலைபடுத்தல் மற்றும் எதிர்பொருள் தூண்டிகளின் மீது மேல் பூச்சு செய்தல் போன்ற பணிகளை இம்யுனோகுளோபின் செய்கின்றன.

வீழ்படிவாதல்:

  • எதிர்பொருள் தூண்டியுடன் வினைபுரிந்து வீழ்படிவுகளை உருவாக்கும் எதிர்ப்பொருள்கள் வீழ்படிவாக்கிகள் என்றழைக்கப்படுகின்றன.

திரட்சி அடைதல்:

  • ஒரு துகள் தன்மை கொண்ட எதிர்பொருளுடன் வினைபுரியும் போது அத்துகள் எதிர்பொருள் தூண்டிகள் திரட்சியடைகின்றன.
  • திரிபடைதலை உருவாக்கும் எதிர்பொருள் திரளி எனப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல்:

  • மேல் பூச்சாக்கம் என்பது நோயூக்கிகளை மேல் பூச்சாக்கி என்னும் பொருளால் மூடி அடையாளமிட்டு நோய்த்தடைக்காப்பு செல்கள் அவற்றை அழிப்பதற்கு வழி செய்தல் ஆகும்.

நடுநிலையாக்கம்:

  • நடுநிலையாக்கத்தில் எதிர்பொருள்கள் நச்சு எதிர்பொருட்கள் எனப்படுகின்றது.
  • இந்த நச்சு எதிர்பொருட்கள் பாக்டீரிய புறநச்சு அல்லது முறிந்த நச்சு (டாக்சாய்டு) விற்கு எதிராக விருந்தோம்பியின் செல்களால் உருவாக்கப்படுகின்றன.

முக்கிய பணிகள்:

  • பாக்டீரியங்கள், வைரஸ்கள் போன்ற துகள் பொருள்களைத் திரிபடைய செய்கின்றன.
  • போகோசைட் செல்களால் இனங்காண்பதற்கும், செல் விழுங்குதல் நடைபெறுவதை எளிதாக்கும் வகையிலும் ஆண்டிபாடிகள் பாக்டீரியங்களின் வெளிப்புறத்தில் பூச்சாக அமைகின்றன. இதற்கு ஒப்சோனீகரணம் என்றழைக்கப்படுகின்றது.
  • பாக்டீரியங்களினால் வெளியேற்றப்படும் நச்சு பொருள்களை செயலிழக்கச் செய்கின்றன.

Similar questions