பாக்டீரிய மரபியல் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
- பாக்டீரியச் செல்கள் ஒரு ஒற்றை டி.என்.ஏ சங்கிலியைக் கொண்டுள்ளன.
- யூகேரியோட் குரோமோசோம்களில் காணப்படுவது போல், பாக்டீரியாக்களிலும் இணை புரதம் காணப்படுவதில்லை.
- பாக்டீரிய ஜீன்கள் இரட்டிதல், பண்புகளை வெளிப்படுத்துதல், திடீர் மாற்றம் மற்றும் ஜீன் மறுசேர்கை ஆகிய பண்புகளை கொண்டுள்ளன.
- பாக்டீரியாக்களில் ஜீன் மறுசேர்கையானது, இணைவு, டிரான்ஸ்டக்சன் மற்றும் உருமாற்றம் ஆகியவற்றால் நிகழ்கின்றுத.
இணைவு:
- பாக்டீரிய இணைவில் ஒரு பாக்டீரிய செல்லின் சில டி.என்.ஏ பகுதிகள் அதனுடன் இணைந்துள்ள மற்றொரு செல்லினுள் மாற்றப்படுகின்றன.
- ஜீன் மாற்றத்திற்கு பின் இணைவு சோடி பாக்டீரியங்கள்/பாக்டீரிய செல்கள் பிரிகின்றன.
உருமாற்றம்:
- பாக்டீரிய உருமாற்றம் என்பது, செல்லமைப்பினை இழந்த அல்லது செல்லமைப்பானது நீக்கப்பட்ட பாக்டீரியாவின் டி.என்.ஏ-க்கள் ஒரு செல்வகையிலிருந்து மற்றொரு செல் வகையினுள் மாற்றப்படும் நிகழ்வாகும்.
- இந்த உருமாற்ற நிகழ்வானது 1928-ம் ஆண்டு கிரிப்பத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1944-ம் ஆண்டு டி.என்.ஏ வானது பண்பினை மாற்றும் பொருள் என்பதனை ஆவரி மெக்லியாட் மற்றும் மெக்கார்த்தி என்பவர்கள் கண்டறிந்தனர்.
டிரான்ஸ்டக்சன்:
- டிரான்ஸ்டக்சன் முறையில், பேக்டீரியோபேஜ் வைரஸ்கள் ஏற்று ஊர்திகளாக செயல்பட்டு, வழங்கி பாக்டீரியத்தில் உள்ள டி.என்.ஏ பகுதியினை ஏற்பு பாக்டீரியத்திற்குள் மாற்றுகின்ற நிகழ்வாகும்.
- டிரான்ஸ்டக்சன் நிகழ்வினை இருவகைகளாக பிரிக்கலாம்,
- அவை:
- பொது வகை டிரான்ஸ்டக்சன்
- சிறப்பு டிரான்ஸ்டக்சன்
பொது வகை டிரான்ஸ்டக்சன்:
- ஒரு பாக்டீரிய செல்லின் அனைத்து டி.என்.ஏ பகுதிகளும் ஏற்று ஊர்தி (வெக்டார்) போக்டீரியபேஜ் வைரஸ்களுக்குள் நுழைகின்றது.
- இந்நிகழ்வானது, பொதுவகை டிரான்ஸ்டக்சன்கள் எனப்படும்.
சிறப்பு டிரான்ஸ்டக்சன்:
- சில ஜீன்கள் மட்டும் ஒரு வழங்கி குரோமோசோமிலிருந்து போக்டீரியயோபேஜ் மூலம் டிரான்ஸ்டக்சன் அடைந்தால்,
- அந்நிகழ்வானது, சிறப்பு டிரான்ஸ்டக்சன் எனப்படும்.
Similar questions