India Languages, asked by tamilhelp, 11 months ago

ஏகில்‌ மார்மிலாஸ்‌ தாவரத்தின்‌ மருத்துவ பயன்களை எழுதுக.

Answers

Answered by Anonymous
0

Answer:

Can you please translate it in Englis

Answered by anjalin
0

ஏகில்‌ மார்மிலாஸ்‌ தாவரத்தின்‌ மருத்துவ பயன்கள்

  • வில்வம் என்பதன் தாவரவியல் பெயரே ஏகில் மார்மிஸ் என்பதாகும்.
  • இத்தாவரமானது, ரூட்டேசி தாவரக் குடும்பத்தை சார்ந்தது.
  • இத்தாவரத்தில் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படும் பகுதிகள் இலை மற்றும் கனி ஆகும்.
  • செரிமான குறைபாடு தொடர்பான நலக்கேடுகளுக்கு இத்தாவரத்தின் இளங்கனியானது பயன்படுகின்றது.
  • குடல் வாழ் ஒட்டுண்ணிகளானது இக்காயினால் அழிக்கப்படுகின்றது.
  • நீண்ட நாட்களாக உள்ள வயிற்றுபோக்கு மற்றும் சீதபேதியினை குணப்படுத்தப் பயன்படுகின்றது.
  • இதயம் மற்றும் மூளையின் திறனை மேம்படுத்த திரவ ஊட்டப்பொருளாக பயன்படுகின்றது.
  • இத்தாவரத்தின் கனிகள் உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை நீக்கக் கூடியதாகும்.
  • இத்தாவரத்தின் இலையானது கல்லீரலின் செயல்களை தூண்டக்கூடியது மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை சரி செய்யக் கூடியதாகும்.
  • கால்சியம், பாஸ்பரஸ், உலோகச்சத்து மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றது .
Similar questions