இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
Answers
Answered by
42
Answer:
இ) தொல்காப்பியம்
Explanation:
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்
Attachments:
Answered by
1
தொல்காப்பியம்
- அழகியலை உருவாக்குவதற்கு தளம் அமைத்து தருகின்ற தொல்காப்பியம் இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கணமாகும்.
- எழுத்துகள் பற்றி பேசுகிறபோது செய்யுளில் வழக்கு பேசப்பட்டு விடுகிறது.
- எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஒரு அமைப்பாக தொல்காப்பியம் கருதுகிறது.
- ஏனைய கலைகளில் இருந்து கவிதைகளையே வேறுபடுகின்ற அதன் முதன்மையான தனிச்சிறப்பான பண்பு இது.
- கிரேக்கம், வடமொழி முதலிய பிற மொழிகளை விட தமிழ் இதனை திட்டவட்டமாக புரிந்து வைத்துள்ளது.
- பேசுபவன் கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள் பேசும் போது கேட்கும் போதுமான தனிச் சூழல்கள் ஆகியன மட்டுமல்லாது வரலாறு முழுக்க மொழி மனித நாக்குகளின் ஈரம் பட்டு கிடைக்கிறது.
- அதனையே இலக்கியம் தனக்கு உரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டி இருக்கிறது.
- உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.
- இலக்கியம் என்ற மொழிசார் கலை மொழியின் தனித்துவமான பண்புகளை இயன்றமட்டும் தனதாக்கிக் கொள்கிறது.
- இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத் தன்மையை தந்து விடுகிறது.
- இத்தகைய தன்மை தான் கவிதைத்தனம் அல்லது இலக்கியத்தனம் என்று பேசப்படுகிறது.
- இதனால் மொழி சார்ந்த பொருள், மொழி சார்ந்த கலையாக ஆகிவிடுகிறது.
Similar questions