‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன்
நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக .
Answers
Answer:
பசுமைதாசன் - மட்கும் தன்மையற்ற நெகிழியானது மழை காலங்களில் நீர் மண்ணில் ஊடுருவதை தடுக்கிறது.
Explanation:
நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து
நான் - ஐயா, வணக்கம்.
பசுமைதாசன் - வணக்கம் ராம்கி.
இன்று உலகப் புவி நாள் (ஏப்ரல் 22) அனுசரிக்கப்படுகிறது.
நான் இன்று உன்னுடன் நெகிழியினை பற்றி கலந்துரையாடப் போகிறேன்.
இதை நீ உன் பள்ளி மாணவர்களும் கூற வேண்டும்.
நான் - சரி ஐயா. நெகிழி மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியன வாங்க உதவுகிறது.
இதனால் என்ன கெடுதல் வருகிறது ஐயா?
பசுமைதாசன் - நாம் நெகிழிப் பொருட்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி ஏறிகிறோம்.
இதனால் மட்காத குப்பைகள் சேர்ந்து நிலம் மாசுபடுகிறது.
இதனை எரித்தாலும் அதிலிருந்து வரும் குளோரோ புளோரோ என்ற நச்சு வாயு காற்றினை மாசுபடுத்துகிறது.
நான் - நெகிழியினால் ஏற்படும் மற்ற தீமைகளை சொல்லுங்கள் ஐயா.
பசுமைதாசன் - மட்கும் தன்மையற்ற நெகிழியானது மழை காலங்களில் நீர் மண்ணில் ஊடுருவதை தடுக்கிறது.
கடல்நீரில் கலக்கும் பிளாஸ்டிக் பாட்டில் போன்ற கழிவுகளினால் மீன்கள் போன்ற கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகிறது.
நான் - இதனை தடுக்க என்ன வழி உள்ளது ஐயா.
பசுமைதாசன் - நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
அதற்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தலாம்.
இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
நான் - உங்களுடன் நடந்த கலந்துரையாடலால் நான் பல செய்திகளை தெரிந்துகொண்டேன்.
என் நண்பர்களும் இந்த செய்தியினை சொல்வேன்.
நன்றி ஐயா வருகிறேன்.
For more related question : https://brainly.in/question/15005957
#SPJ1