புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச்
சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
Answers
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம்
அனுப்புநர்:
ஊர்ப் பொதுமக்கள்,
பொது நகர்,
வீரன்பட்டி ,
புதுவை - 4.
பெறுநர்:
மின்வாரியப் பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
புதுவை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: புயல் தாக்கத்தினால் எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டுதல் சார்பாக
வணக்கம்,
நாங்கள் வீரன்பட்டியில் பொது நகர்ப்பகுதியில் வசித்து வருகிறோம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. எங்கள் பகுதிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது சுழன்றடித்த சூறாவளியால் மரங்கள் வீழ்ந்து மின் இணைப்புக் கம்பிகள் எல்லாம் அறுந்து கிடக்கின்றன. விளையாட வரும் குழந்தைகள், வண்டி வாகனங்களில் செல்வோர், வயலுக்கு ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வோர் என்ற பலரும் பயணம் செய்யும் பாதை இது. மின் இணைப்புக் கம்பிகள் அறுந்தும், தொங்கிக்கொண்டும் கிடப்பதால் பலருக்கு துன்பம் ஏற்பட வாய்ப்புண்டு. ஏன் உயிர்ப்பலி கூட நடக்கலாம் எனவே, அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சீர்செய்து தருமாறு உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எங்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குத் தருவோம் என உறுதி கூறுகிறோம்.
இப்படிக்கு,
ஊர்ப் பொதுமக்கள்,
பொது நகர்,
வீரன்பட்டி ,
புதுவை - 4.
இடம்: வீரன்பட்டி,
நாள்: 22.02.2021
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மின்வாரியப் பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
புதுவை.
#SPJ1
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம்.
அனுப்புநர்:
- இரா. கோவலன்,
- த/பெ.மா. இராகுலன்,
- 3136, பூம்புதார் நகர்,
- ககககக.
பெறுநர்:
- திரு. மின்வாரியப் பொறியாளர் அவர்கள்,
- மின்வாரிய அலுவலகம்,
- ககககக.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
பொருள்: அறுந்துகிடக்கும் மின்இணைப்புகளை சரிசெய்துதரக் கோருதல் சார்பு.
வணக்கம். நான் -மேற்கண்ட முகவரியில் சுமார் இருபது ஆண்டுகளாக வசித்துவருகிறேன். எங்கள் ஊரில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த பெருமழையினாலும் கடுங்காற்றினாலும் மின் இணைப்புகள் அறுபட்டுக் கீழே விழுந்துவிட்டன. மழைக்காலம் என்பதால் மின்இணைப்புகளிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஊறு ஏற்பட வாய்ப்புள்ளது. மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் கிராமம் முழுவதும் இருள்மயமாய்க் காட்சியளிக்கிறது. வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவ மாணவியர் அனைவரும் மின்சாரம் இல்லாமல் அவதியுறுகின்றனர். ஆகவே, கடிதம் கண்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி --
இப்படிக்கு,
இரா. கோவலன்
#SPJ1