Computer Science, asked by celin7033, 11 months ago

உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக்
கட்டுரையாக்குக.

Answers

Answered by sivaleeba10
2

Answer:

what are you doing today hope you had any questions you might be able and willing I will send the angle of reflection of the angle is the

Answered by karthikanand1024
3

Answer:

வாழும் கலைஞர் :

இன்றும் இசை மும்மூர்த்திகளின் ஒருவரான தியாகராஜருக்கு இசை விழா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் நிகழ்ந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதிகளில் இசையின் பற்பல துறைகளில் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் என்றாலே நன்செய் மட்டுமல்ல. நல்லிசையிலும் கலைஞர்கள் இருப்பது சிறப்பு.

திருவிசநல்லூர் ஜெயராமன் :

கும்பகோணத்தின் கிழக்கே 5 கி,மீட்டர் தொலைவில் உள்ள ஊர் திருவிசநல்லூர். அவ்வூரில் எல்லாராலும் அறியப்பட்ட திரு.ஜெயராமன். நாதஸ்வரக் கலைஞரைப் பார்க்கச் சென்றேன். ஓட்டு வீடு, வீட்டின் முற்பகுதியில் இரண்டு நாற்கலிகள், ஒரு நீண்ட மேசை அவ்வளவுதான். வீட்டின் முன்புறச் சுவரில் காருக்குறிச்சி அருணாச்சலம், மதுரை M.P.M. பொன்னுச்சாமி சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை இவர்களின் புகைப்படங்கள், பார்த்துக் கொண்டிருக்கும் போதே வணக்கம், வாங்க தம்பி என்ற குரல். நானும் எழுந்து வணங்கி நின்றேன். எழுபது வயதிருக்கும்.

வறுமையின் சாயல் தெரிந்தது. ஐயா, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றேன். எங்கள் வீட்டில் நாதஸ்வரம் செய்வது தொழிலாக இருந்தது. எனது தாத்தா காலத்தில் இருந்தே நாதஸ்வரத்தைக் கையில் எடுத்து விட்டேன். எனக்கு என் தந்தை மூச்சை அடக்கும் பயிற்சியை நீருக்குள் மூழ்கிக் கற்றுக் கொடுத்தார். பலூன்களில் காற்றை ஒரே மூச்சில் ஊதப் பயிற்சி அளித்தார். நாதஸ்வரத்தைப் பிடிக்கும் முறையைச் சொன்னார். மன ஒருமைப்பாடு பற்றிக் கூறினார். கீர்த்தனங்களில் ஏற்ற இறக்கம், ஒவ்வொன்றிற்கும் இடைவெளி நேரம் சொல்லிக் கொடுத்தார்.

எனது தந்தை சொல்லிக்கொடுத்த அடிப்படைப் பயிற்சியும், எனக்குள் இருந்த இசை அறிவும், ஆவலும் என்னை மக்களுக்குப் பரிச்சயம் ஆக்கின. வருமானம் என்பது போதுமானதாக இருந்தாலும் தேவைகளை பூர்த்திச் செய்ய பற்றாக்குறைதான். இப்பொழுது எனக்குள்ளே ஒரே ஒரு ஏக்கம்தான் என்னவென்றால் நான் கற்ற கொஞ்சம் அதாவது குறைவான கலையை யாருக்காவது சொல்லிக் கொடுக்கணும். அதுதான் என் ஜீவனுடைய ஆவல் என்றார். தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலம்தானா வாசித்துக்காட்டினார்.

அதிசயித்து விட்டோம். அப்படியொரு வாசிப்பு. எங்களாலான ஒரு அன்பளிப்பை அவருக்கு அளித்து வீடு திரும்பினோம். அந்த இசைமேதை – நாமெல்லாம் படிக்காத ஒரு மேதை.

Similar questions