குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து
நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல்
போனாலோ அல்லது மிகக் குறைந்த
விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி
செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற
எம்முறையை பரிந்துரை செய்வீர்?
Answers
Answered by
0
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் முறை
- குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் முறையினை பரிந்துரை செய்யலாம்.
- விந்து செல்களை உட்செலுத்துதல் முறையானது குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்கின்ற ஆண்களுக்குச் செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும்.
- இந்த முறையில் விந்து திரவம் ஆனது கணவர் அல்லது உடல் நலமிக்க விந்துக் கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.
- இது அண்டகத்தினை தூண்டி அதிக அண்ட செல்களை உற்பத்தி செய்கிறது.
- சேகரிக்கப்பட்ட விந்து செல்கள் நுண்குழல் மூலம் கலவிக் கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படுகிறது.
- இதனால் விந்து செல்கள் அண்ட நாளத்தினை நோக்கி சென்று கருவுறுதல் நிகழ்ந்து கர்ப்பம் உண்டாகிறது.
Similar questions