Biology, asked by namazzisalmah3532, 10 months ago

கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான
குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும்
தூது ஆர்.என்.ஏ வில் உள்ள நியூக்ளியோடைடு
வரிசையினை எழுதுக.
5' TGCATGCATGCATGCATGCATGCATGC 3'

Answers

Answered by sumitkumarf46
0

ஆர்.என்.ஏ நகலாக்கம் அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன [1]. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.

நகலாக்கம் என்னும் நிகழ்வு ஒரு மரபணுவை வெளிப்படுத்தும் முதன்மையான நடப்பு ஆகும்.ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் டி.என்.ஏ க்கள் ஆர்.என். ஏ முதிர்வாக்கம் என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு செய்தி ஆர்.என்.ஏ (mRNA) வாக மாற்றப்படும். பின் இவை ரிபோசொமில் சேர்க்கப்பட்டு புரத உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாற்றாக, நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ-க்கள் டி- ஆர்.என்.ஏ (tRNA) மற்றும் ஆர்.ஆர்.என்.ஏ (rRNA) வாக மாற்றப்படும். இவைகளும் புரத உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்றாகும். குறு ஆர்.என்.ஏ களும், ஆர்.என்.ஏ நகலாக்கம் என்னும் நிகழ்வின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஒரு மரபணுவை வெளிப்படுத்தலை ஒருங்கமைவு (regulation) பணிகளில் ஈடுபடுகின்றன. மெய்க்கருவுயிரிகளில், வெளிப்படும் மரபணு ஒற்றை சிசுத்ரோன் (Mono Cistronic) ஆகும் (சிசுத்ரோன் என்பது ஒரு மரபணு வெளிப்படும் நிறைவான அமைப்பு ஆகும்). ஆனால் நிலைக்கருவிலிகளில் பல சிசுத்ரோன் (poly Cistronic) ஆகும் (ஒரு நிகழ்வில் ஈடுபடும் அனைத்தும் மரபணுக்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன).

Answered by anjalin
0

5’−UGCAUGCAUGCAUGCAUGCAUGCAUGC-3’

விளக்கம்:

  • புரதத்தின் தொகுப்பிலிருந்து, தூது என்ற வரிசை, டி. என். ஏ. விலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. தூது வில், அடுத்தடுத்த மூன்று நியூக்ளியோடைடுகள், புரதச் சேர்க்கை அல்லது அமினோ அமிலத்தின் நிறுத்து சமிக்ஞையை கொண்டுள்ளன. டிரோநியூக்ளியோடைடு 'கோடோன்' என்றழைக்கப்படுகிறது.  
  • மெசஞ்சர், புரதம் உருவாக்கத்தில், மனிதர்கள் வாழ்வதற்கு அவசியமான ஒன்று. புரதங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்றால், சுவாசம் மற்றும் ஆற்றல் செலவு போன்ற இயல்பான பணிகள் சாத்தியமில்லை, செல்கள் ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாக மறுக்கப்படும்.
  • தற்போது, mRNA நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பயன்படுத்தப்படும் சாத்தியமான என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. mRNA அடிப்படையிலான தடுப்பூசிகள் தொற்றுநோய்கள் மற்றும் புற்று நோய் தடுப்பூசி மருந்துகளுக்கு நோய்த்தடுப்பாக உருவாக்கப்படுகிறது.  

Similar questions