நீ வாழும் பகுதியில் இளவச இணைய வசதி அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதுக?
Answers
❏நீ வாழும் பகுதியில் இளவச இணைய வசதி அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதுக
விண்ணப்ப படிவம்
பெயர்: நந்திலன் ந
(ஊர் பொதுமக்கள் சார்பாக)
முகவரி : நந்திலன் ந
நல்வாழ்வு குடியிருப்பு
அண்ணா நகர் மேற்கு சென்னை 60000
விண்ணப்பம் தொடர்புடைய துறை: இணையதள வாரியம்
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
எங்கள் ஊரில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இணைய வசதியின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. மேலும் எங்கள் ஊரில் இணைய வசதி குறைவாகவே உள்ளது. தாங்கள் தயவு கூர்ந்து எங்கள் ஊருக்கு இலவச இணைய வசதியை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் இன்றைய இளைய தலைமுறையின் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தகவலுக்கும் உரிய நடவடிக்கைக்கும் .
முகவரிதாரருக்காக அனுப்பும்
கிராம தன்னார்வலர் பெயர்,
நந்திலன் ந