India Languages, asked by tamilhelp, 10 months ago

உழவுத் தொழில் - கட்டுரை வரைக

Answers

Answered by anjalin
147

முன்னுரை

       உழவன் உலகின் உயிர்,உழைப்பாளி காடு,கடல்,நிலம்,வணிகம் எனப் பல தளத்திலும் உழைப்பான்,உயிர்களுக்கு அன்னையைப் போன்றவர்.           உழைக்கும் உழவரே (வெண்பாமாலை.344), போர்ப் படையை விட ஏர்ப்படையே சிறந்தது, அரசரைவிட உழவரே சிறந்தவர் (பெரும்பொருள்) விளைவிக்கும் காலத்தில் விளைவிக்க வேண்டும், உழவர் குடிக்கு வேண்டாதது சூது.வேண்டுவன பார்ப்பாரைக் கண்டு எச்சரிக்கைகையாக இருத்தல்.உழவை விரும்பியப் போற்றுதல் (திரிகடுகம்.42)ஒரு நல்ல உழவன் நாள்தோறும் ஏரைப் போற்றுவான் புன் செய் நிலத்தைத் திருத்துவான்.நகரத்தை நோக்கி நகரமாட்டான் உணவுதரும் தொழில் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்

         சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது.இந்தியா கிராமங்களில் வாழ்கிறது தமிழ் - தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில், வேளாண்மை, உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர். அக்கால நிலை அது போலும், ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

எருவிடுவான், கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்துவான் (சிறுபஞ்சமூலம்.52) உழவனுக்கு எருதுகள் இல்லாமை இன்னா. நிலத்தின் ஈரம் இல்லாமை இன்னா (இன்னாநாற்பது.4). நிலத்தை உழுது விதைத்து நெற்பயிர் விளை (ஆத்திசூடி.82) ஒருவரை வணங்கி வாழ்தலைவிட உழுது விளைத்து வாழ்தல் இனிது. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.உழவு வழி வரும் செல்வம் குன்றாது (கொன்றை வேந்தன்.77)உழவு பணியே சிறந்தது.பிற பணி எல்லாம் பழுதுடையவை (நல்வழி.12) உழவுர்க்கு அழகு தானே உழைத்து விளைத்த உணவை உண்ணுதல்,உழுதொழிலைச் செய்து உணவு உண்ணாது வறிதே ஏழையாக இருப்போர் பதராவர்.

உழவுத் தொழிலே சிறந்தது.

        உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலைப் பின்பற்றியே நிற்கும்.அதனால் எவ்வளவு துன்பமானாலும் உழவே சிறந்த தொழிலாகும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்;.இதனை,

         சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

        உழந்தும் உழவே தலை     (குறள்.1031)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

உழவர் அச்சாணி போன்றவர்

         உழுத்தொழில் செய்யும் வலிமை இல்லாது பிற தொழில் செய்கின்றவரையும் தாங்குவதால்,உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் அவர் இதனை,  

          உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

          எழுவாரை எல்லாம் பொறுத்து    (1032)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.

உரிமையோடு வாழ்வர்

          உழவு செய்து வாழ்வரே உரிமையோடு வாழ்வா.;விளை நிலங்கள் வீடு ஆதல்மற்றவர் பிறரைத் தொழுது அவர் பின் சென்று வாழ்வர்.இதனை,

           உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்

          தொழுதுண்டு பின்செல் பவர்      (1033)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.

உழுது நெல்லை உற்பத்தி செய்யும் உழவர்கள் பல வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் நிலங்களையும் தம் வேந்தரின் குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பதை,

              பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்

            அலகுடை நீழ லவர்        (1034)

என்ற குறள் வெளிப்படுத்துகிறது.இதன் மூலம் நான்கு வருணத்தார்களில் (அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்) இரண்டு வருணத்தாரான அரசரும்,வேளாளரும் இருந்த செய்தியை அறியமுடிகிறது.

உழவர்கள் யாசிக்க மாட்டார்கள்

      கையினால் தொழில் செய்து உழைத்து உண்ணும் தொழிலாளர் பிறரிடம் சென்று யாசிக்க மாட்டார். வெள்ளத்திலும் வறட்சியிலும் தம்மை யாசித்தவருக்கு மறைக்காமல் கொடுப்பர்.இதனை,

       இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது

       கைசெய்துஊண் மாலை யவர்        (1035)

என்ற குறளின் வழி வெளிப்படுகிறது.

உழவனின் இலக்கணம்

        ஒரு நல்ல உழவன் தன் நிலத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலைச் சேர்த்து வைத்திருப்பான் நாள்தோறும் உழுது ஏரைப் போற்றுவான் புன்செய் நிலத்தையும் திருத்துவான்.எருவிடுவான் கலப்பையால் நிலத்தைப் பண்படுத்துவான்.

முடிவுரை

         இன்றையநிலை, இந்தியாவில் இருக்கும் தமிழகத்தில் இன்றளவும் உழவுத் தொழில் சிறந்ததாக காணப்படுகிறது.இத்தகைய உழவுத் தொழிலின் மூலம் விளையும் பொருட்களை இன்றளவும் உட்கொண்டு  மக்கள் உயிர்    வாழ்கின்றனர். செயற்கை உரம் தரும் சீரழிவை தவிர்க்கவேண்டும். இத்தகைய உழவின் சிறப்பை அற இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன என்பதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

Answered by shreesakthi
12

Answer:

  • உழவு

என்பது கருவிகளையும் எந்திரங்களையும் கொண்டு மண்ணை விதை முளைப்பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றபடி பக்குவப்படுத்தி ஆயத்தப் படுதலாகும்.

  • பண்படுத்துதல்

என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு.

  • முதல்நிலை உழவ

என்பது அறுவடைக்கு அடுத்து உடனடியாக நிலத்தை உழுது பண்படுத்துதலே முதல்நிலை உழவு எனப்படுகிறது. முதன்மை உழவு எனப்படுவது மண்ணை நன்கு உழுது, நிலத்தை விதைப்புக்கு ஏற்றாற் போல் தயார்படுத்துதல் ஆகும். இதில் களைகள், பயிர் கட்டைகள் போன்றவை இருப்பின் உள் மூடப்பட்டு மட்க வைக்கப்படுகின்றன. நாட்டுக் கலப்பை,இரும்பு இறக்கைக் கலப்பை,போஸ் கலப்பை மற்றும் டிராக்டர்கள் கொண்டு உழுவது முதல்நிலை உழவு ஆகும்.

  • இரண்டாம்நிலை உழவு

என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும்.

  • மூன்றாம்நிலை உழவு

என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும்.

Explanation:

it is the correct answer ♥️

Similar questions