திருவள்ளுவர் விருந்தோம்பலை எவ்வாறு வலியுறுத்துகிறார்?
Answers
Answered by
1
விருந்தோம்பல்
- திருவள்ளுவர் இல்லறவியலில் 'விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே' அமைத்திருக்கிறார்.
- இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்;
- முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
- விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
- கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளஙகோவடிகள் உணர்த்துகிறார்.
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
- கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
Similar questions