கோசல நாடு குறிப்பு வரைக
Answers
Answered by
8
கோசல
- இதன் தலைநகரம் அயோத்தி ஆகும்.
- கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் மன்னர்.
- இச்வாகுவின் வழித்தோன்றல்கள் ஆவார்.
- இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர்.
- இப் பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது.
- அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூலினதும், பகவதி சூத்திரம் எனும் சமண நூலினதும் அடிப்படையில் கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும்.
- இதன் கலாசார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் காரணமாக இது ஒரு பெரும் சக்தி படைத்த நாடாக மாறியது.
- எவ்வாறாயினும் பிற்காலத்தில் இது, அதன் அண்டைய நாடான மகதத்துடன் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டமையால் மிகவும் பலவீனப்பட்டு,
- இறுதியில், கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது.
- கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன.
- இவற்றைவிட சேதவ்யா, உகத்தா தந்தகப்பா, நளகபன மற்றும் பங்கதா போன்ற சிறிய நகரங்களும் காணப்பட்டன.
- புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின் கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது.
- கி.மு.6ம் நூற்றாண்டுக்கும், கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் இடையில் கோசலையின் தலைநகரமாக சிராவஸ்தி விளங்கியது.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Chemistry,
5 months ago
English,
10 months ago
Math,
10 months ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago