பாய்ச்சல் கதைச்சுருக்கம்
Answers
பாய்ச்சல்
தெருமுனையில் ஏதோ சப்தம். ஆளோடித் தூணைப் பிடித்துச் சுற்றிக்கொண்டிருந்த அழகு, தலையை நீட்டிப் பார்த்தான். இவனையொத்த சிறுவர்கள் புழுதி பறக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னவோ நடக்கிறது என்று நினைத்துச் சாலைக்கு வந்தான். தெருவின் முனையில் பெரிய கூட்டம். மேளம் கடகடவென்று இரைந்து கொண்டிருந்தது. ஊருக்கு இவன்புதிதாகையால் என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.
நாதசுரமும் மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தன. இவன் குனிந்து பார்த்தான். இரண்டு கால்கள் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக்கால்கள் மனிதக் கால்களிலிருந்து மாறுபட்டு, பச்சையா நீலமா என்று தீர்மானிக்க முடியாத நிறத்திலிருப்பதை இவன் கண்டான்.
ஆள் உயரக் குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து கீழே இறங்குவது தெரிந்தது. தான் கண்டதை இவனால் நம்ப முடியவில்லை. கண்ணுக்குத் தெரிந்தது நிஜமா என்கிற தவிப்பு. இப்போது தான் கண்டது குரங்கல்ல,
அனுமார்
இது—அனுமார் நினைவு இவனுக்கு வந்தது. இது அனுமார்தான். மனத்தில் அனுமாரைக்காணும் ஆவல் பெருக முண்டியடித்துக்கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான்.
அனுமார் வலது காலையும் இடது காலையும் மாறி மாறித் தரையில் உதைத்து வேகமாகக் கைகளை வீசி நடக்க ஆரம்பித்தார்.இவனும் கூட்டத்தோடு பின்னால் நடந்தான்.
கொஞ்சதூரம் சென்றதும் அனுமார் ஒரு கடையில் தொங்கிய வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து எட்டியவர்களுக்கெல்லாம் கொடுத்தார். இவனுக்கும் அதிலொன்று கிடைத்தது. பழத்தைப் பையில் வைத்துக்கொள்வதா என்பதை இவனால் தீர்மானிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கையில் கூட்டம் வட்டமாகமாறியது. இவன் பின்னால் கொஞ்சம் நகர்ந்து மேளக்காரன் பக்கத்தில் நின்றான்.
சதங்கையும் மேளமும் நாதசுரமும் ஒன்றாக இழைந்தன. அனுமார் தாவிக் குதித்துக்குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து சென்றார், நீண்ட வால் மேலே சுழன்று சரேலென்று தரையில் படர்ந்து புழுதியைக் கிளப்பியது.
திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின. எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலைநோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழேகுதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
அழகு அவர்கள் அருகில் சென்றான். வெகு நேரமாக வால் சுமந்து வருவது ஒருவனுக்குக் கஷ்டமாக இருந்தது போலும். அருகில் அழகு சென்றதும் வாலைக் கொடுத்துவிட்டுக் கைகளை நன்றாக உதறியவாறு, ‘ஒம் பேரு’ என்றான்.
‘அழகு’
‘கூட வரேல்ல’
இவன் தலையசைத்தான்.
‘செத்த வச்சுக்க; வந்துடறேன்’
இவன் கைகள் மொசு மொசுப்பான வாலைத் தடவிவிட்டன.அனுமார் நடையில் வேகம் கூடிற்று. அவருக்கு இணையாக வாலைத் தூக்கிக்கொண்டு இவனால் நடக்க முடியவில்லை. அனுமார் கூடவே ஓடினான்.
கார் வேகம் குறைய மெல்ல ஊர்ந்து முன்னே வந்தது. அனுமார் பின்னுக்கு நகர்ந்து சென்றார். காரிலிருந்தவன், பணத்தை எடுத்து அனுமார் பக்கமாக நீட்டினான். அனுமார் மேளக்காரனைப் பார்த்தார். அவன் அவசர அவசரமாக முன்னே வந்து பணத்தை வாங்கி மடியில் கட்டிக் கொண்டான். கார் செல்லக்கூட்டம் சிதற அனுமார் தெற்காக நடக்க ஆரம்பித்தார். இவன் ஓடிப்போய் வாலைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டான்
அனுமார் வாயால் மூச்சு விட்டுக்கொண்டு ஆலமரத்தில் சாய்ந்துகொண்டார். மேளக்காரன் ஆட்டத்தில் சேர்ந்த பணத்தைக் கணக்குப் பார்த்துப் பிரித்தான். அனுமாரிடம் அவர் பங்கைநீட்டினான். அவர் ராமுவிடம் கொடுக்கும்படி சைகை காட்டினார். மேளக்காரன் ஒருமுறைக்கு இரண்டு முறையாக எண்ணி ராமுவிடம் பணத்தைக் கொடுத்தான்.
மரத்தில் சாய்ந்து நின்றிருந்த அனுமார் நடக்க ஆரம்பித்தார். ராமு புழுதியில் புரண்ட வாலை அவசரம் இல்லாமல் வந்து மெல்லத் தூக்கினான். சுமைதாங்கிக் கல் மீது உட்கார்ந்திருந்த அழகு, அனுமார் போவதைப் பார்த்து வேகமாகக் கீழே குதித்து வந்து வாலை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டான்.
அழகு அனுமார் விழுநதவதக ்கவனிக்காமல், தன் ஆடடத்தில் மூழ்கியவனா்கக ்களிப்பும் உற்சா்கமும் யபாங்க பவ்கமா்க ஆடிக ய்காணடிருநதான்.