India Languages, asked by tamilhelp, 1 year ago

. ரிஸினஸ் கம்யூனஸ் தாவரத்தின் ஆண் மலரின் வரைபடம் வரைந்து வாய்ப்பாட்டினை எழுதுக.

Answers

Answered by anjalin
0

ஆமணக்கு  (ரிஸினஸ் கம்யூனஸ்)

ஆண் மலரின் தன்மைகள்:

  • ஆண்மலர் வடிவமைப்பு – பூவடி செதிலுடையது, பூக்காம்பு செதிலற்றுத, ஆரச்சமச்சீர் உடையது மற்றும் முழுமையற்றவை.
  • பூவிதழ் வட்டம் - பூவிதழ்கள் 5, இணைந்தவை, தொடு இதழ்மைவு, ஒற்றைப் பூவிதழ் மலரின் மேல்பக்கத்தில் காணப்படும்
  • மகரந்தத்தாள் வட்டம் - பல மகரந்தத்தாள்கள் உடையவை, பல கற்றை மகரந்தத்தாள், மகரந்தக் கம்பிகள் கிளைத்தும், இணைந்தும் ஐந்து கிளைகளாகவும் காணப்படுகின்றது மற்றும் இரண்டு அறைகள் கொண்ட மகரந்தப்பை காணப்படுகின்றது.
  • சூலக வட்டம் - சூலக வட்டமானது காணப்படுவதில்லை, எனினும் மலட்டு சூலகம் காணப்படுகின்றது.

பெண் மலரின் தன்மைகள்:

  • பெண் மலரின் வடிவமைப்பு – பூவடிச் செதிலுடையது, பூக்காம்புச் செதிலற்றவை, ஆரச்சமச்சீர் உடையது மற்றும் முழுமையற்றவை மற்றும் இவை சூலக மேல் மலர்களை கொண்டவைகளாகும்.
  • பூவிதழ் வட்டம் - பூவிதழ்கள் 3, தொடு இதழ் அமைவில் இணைந்தவை.
  • மகரந்தத்தாள் வட்டம் - மகரந்தத்தாள் வட்டம் காணப்படுவதில்லை, எனினும் மலட்டு மகரந்தத்தாள் காணப்படுகின்றது.
  • சூலகம் - மூன்று சூலிலைகள், இணைந்தவை, மூன்று சூலக அறைகள், அச்சு சூல் ஒட்டு முறை, மேல்மட்ட சூற்பை.
  • கனி – ரெக்மா எனப்படும் பிளவுக்கனி காணப்படுகின்றது.
  • விதை – கருவூண் உடையது.

ரிஸினஸ் கம்யூனஸ் தாவரத்தின் மலர் சூத்திரம்:

ஆண்மலரின் மலர் சூத்திரம் - Br., Ebrl., (+), ♂, P(5), Aα, G0  

பெண்மலரின் மலர் சூத்திரம் - Br., Ebrl., (+), ♀, P(3), A0, G3

Similar questions