India Languages, asked by tamilhelp, 8 months ago

மூலக்கூறு ஒட்டுதல் எனப்படுவது யாது

Answers

Answered by anjalin
0
  • மூலக்கூறு ஒட்டுதல் நிகழ்வானது டி.என்.ஏ மறுசேர்கை தொழில்நுட்பத்தின் ஒரு நிகழ்வாக உள்ளது.
  • ரெஸ்ட்ரிக் -ன் எண்டோநியூக்ளியேஸ்களை பயன்படுத்தி, கடத்தி டி.என்.ஏ-க்களை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கப்படுதல் வேண்டும்.
  • டி.என்.ஏ லைகேஸ் என்ற நொதியை பயன்படுத்தி வழங்கு உயிரியின் டி.என்.ஏ துண்டுகளும், கடத்தி டி.என்.ஏ துண்டுகளும் இணைக்கப்படுகின்றன.
  • இந்த நிகழ்ச்சி மூலக்கூறு ஒட்டுதல் (ஸ்பிலைசிங்) எனப்படும்.  
  • மூலக்கூறு ஒட்டுதல் விளைவாக கலப்பு டி.என்.ஏ (ஹைபிரிட் டி.என்.ஏ) அல்லது மறுசேர்கை டி.என்.ஏ உருவாகிறது. மறுசேர்கை டி.என்.ஏ எ.கோலை, பேசில்லஸ் சப்டிலிஸ், ஸ்ட்ரெப்டோமைஸிஸ் சிற்றினம் போன்ற ஓம்புயிரி செல்களில் செலுத்தப்படுகிறது.

மறுசேர்கை டி.என்.ஏ-க்களின் மூலம் உருவாக்கப்பட்ட சில மருந்துகள்:

  • மனித வளர்ச்சி ஹார்மோன் - ஹைம்போபிட்யூட்ரிசம் காரணமாக வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றது.
  • இன்டர்பெரான் - செல்களுக்கு வைரஸ்களை எதிர்க்கும் திறனூட்டுகிறது
  • இன்டர்லியூக்கின் - நோய் எதிர்ப்பு திறன் பெற்ற இரத்த வெள்ளையணுக்கள் பெருக்கத்தை தூண்டுகிறது.
  • இன்சுலின் - நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது
  • ரெனின் தடுப்பான்கள் - இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

Similar questions