India Languages, asked by tamilhelp, 1 year ago

இரத்த அழுத்தத்தை எவ்வாறு அளக்கலாம் மற்றும் மிகை இரத்த அழுத்தத்தின் விளைவுகளை பற்றி எழுதுக.

Answers

Answered by anjalin
0
  • இரத்த அழுத்தத்தை கண்டறிய உதவும் உபகரணமானது, ஸ்பிக்மோமானோமீட்டர் என்றழைக்கப்படுகிறது.
  • இரத்த அழுத்தம், தமனி இரத்த அழுத்தம் என்பது இரத்த குழாய்களுக்குள் ஒடும் இரத்தமானது இரத்த குழாய்களின் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தமாகும்.
  • இதய சுழற்சிக்கு ஏற்ப தமனியில் ஏற்படும் இரத்த அழுத்தமானது வேறுபடும்.  
  • இதயச் சுழற்சி என்பது இதயமானது சுருங்கும் போதும், விரிவடையும் போதும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பே ஆகும்.
  • இதயச் சுழற்சியில் நடைபெறும் நிகழ்ச்சியான சுருங்குதல் (சிஸ்டோல்) மற்றும் விரிவடைதல் (டயஸ்டோல்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இரத்த அழுத்தமானது, இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • அவை, சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம்.

சிஸ்டோலிக் அழுத்தம்:

  • வெண்ட்ரிக்கிள் சுருங்கும் போது, இடது வெண்ட்ரிக்கள் இரத்தத்தை தமனிக்குள் வேகமாக அனுப்புவதினால், உச்ச அழுத்தத்தமானது ஏற்படுகின்றது, அவ்வழுத்தடானது, சிஸ்டாலிக் அழுத்தம் எனப்படும்.

டயஸ்டாலிக் அழுத்தம்:

  • இதயம் விரிவடையும் போது அழுத்தம் வேகமாகக் குறைந்து, மிகக் குறைந்த நிலையினை அடைகிறது.
  • இந்த குறைந்த அழுத்தமானது டயஸ்டாலிக் அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.

           சாதரண இரத்த அழுத்த அளவு 120/80மி.மீ Hg ஆகும். இதில் 120 என்பது சிஸ்டோலிக் அழுத்தத்தையும், 80 என்பது டயஸ்டோலிக் அழுத்தத்தையும் குறிக்கும்.

  • இருவகை ஸ்பிக்மோ மானோமீட்டர்கள் உள்ளன.
  • மானோமீட்டர் வகை
  • டிஜிட்டல் (நவீன) வகை.

ஸ்பிக்மோமானோமீட்டரின் பயன்கள்:

  • இரத்த ஓட்டத் தன்மையையும், இதயம் செயல்படுவதையும் கண்டறிய ஸ்பிக்மோ மானோமீட்டர் உதவுகின்றது.
  • ஹைப்பர் டென்ஷன் என்ற அதிக இரத்த அழுத்தத்தையும், ஹைப்போ டென்ஷன் என்ற குறைவான இரத்த அழுத்த நிலையினையும் கண்டறிய பயன்படுகிறது.

மிகை அழுத்தத்தின் விளைவுகள்:

  • மிகை இரத்த அழுத்தமானது அல்லது  தமனி  உயர் இரத்த அழுத்தம் என்பது தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்த பெற்ற ஒரு நீடித்த/நீடித்த நோய்/மருத்துவ நிலை ஆகும்.
  • ஓய்வுநிலையில் இதய சிஸ்டோல் அளவானது, 100-140 mmHg மற்றும் இதய டையஸ்டோல் அளவானது, 60-90 mmHg என்ற வரம்புகள் இரத்த அழுத்தமானது இருக்க வேண்டும்.
  • தொடர்ந்து இரத்த அழுத்தமானது 140/90 mmHg என்ற அளவிற்கும் மேல் இருந்தால், அந்த இரத்த அழுத்தமானது மிகை இரத்த அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.

மிகை இரத்த அழுத்தமானது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவையாவன,

  • இதயத்தாக்கம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, தமனிகளின் குருதி நாள சுழற்சி, வெளிப்புற தமனி நோய் மற்றும் நீடித்த சிறுநீரக நோய் ஆகியவற்றிற்கு உயர் இரத்த அழுத்தமானது காரணமாகிறது.
  • தமனி வழி உயர் அழுத்தத்தின் காரணமாக இறப்புக் கூட நேரிட வாய்ப்புகள் உள்ளன.
  • உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை செயல்பாட்டில் பிரச்சனை, ஞாபக சக்தியில் பிரச்சனை, கண்ணிலுள்ள இரத்த நாளங்கள் தடித்தல், குறுகுதல் மற்றும் கிழிந்து போதல், இரத்தம் உறைதல், சிறுநீரக நோய், வளர்சிதை குறைபாடு மற்றும் மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Similar questions