India Languages, asked by tamilhelp, 1 year ago

பரிணாம வளர்ச்சியில் புது சிற்றினம் தோன்றுவதற்கு இயற்கைத் தேர்வு எவ்வாறு ஒரு கருவியாக பயன்படுகிறது என்பதனை விளக்குக.

Answers

Answered by mohdirfan40133
1

Answer:

तततणमणतततथथतथजहूलाइक

Answered by anjalin
1
  • கூட்டிணைப்புப் பரிணாமக் கோட்பாட்டில், இயற்கைத் தேர்வுக் கோட்பாடானது உயிரினத் தொகை சார்ந்த மரபியல் நிகழ்வாக கருதப்படுகிறது.
  • இயற்கை தேர்வானது சில அல்லீல்களின் தொடர் தோன்றுதல்களை மாறுபட செய்து புதிய தகவமைப்புப் பண்புகளை ஊக்குவிக்கின்றது.
  • உயிரினத் தொகையானது எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
  • இது போன்ற பிரச்சனைகளை சமாளித்து வாழும் உயிரினங்கள் தப்பி வாழ்கின்றன. இவ்வாறு தொகை எண்ணிக்கையும், சுற்றுச்சூழல் காரணிகள் இணைந்து ஒர் ‘தேர்வு அழுத்தத்தை” ஏற்படுத்துகின்றன.
  • இந்த அழுத்தமானது, அல்லீல்கள் மரபணு குழுமத்தின் அதன் தகவமைப்பை பொறுத்து பரவலை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கின்றது. இதனால் பரிணாம மாற்றம் நிகழ்கின்றது.

மூன்று வகை

  1. நிலைப்படுத்தும் முறை,
  2. இலக்கு நோக்கிய முறை,
  3. உடைப்பு முறைகளாகும்.

நிலைப்படுத்தும் முறை

  • சூழல் தன்மைகளுக்கு ஒவ்வாத அல்லது தீங்குகளை உண்டாக்கும் பண்புகளை உயிரினத் தொகையிலிருந்து நீக்கிவிடுகின்றது.
  • உடல் அமைப்பு தன்மைகள் இயற்கை சூழல் தன்மைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாப்புடன் நிலைப்படுத்தப்படுகின்றது.

இலக்கு நோக்கிய முறை:

  • இம்முறையில், சுற்றுச்சூழலில் படிப்படியாகத் தோன்றும் மாறுதல்களுக்கு ஏற்ப உயிரினத் தொகையின் அமைப்பு தன்மைகளில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றது.
  • இவ்வேறுப்பாடுகளால், உயிரினத் தொகையில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றது,
  • அவற்றுள் மிகவும் வேறுபட்ட மாற்றமானது முக்கியத்துவம் பெறுகின்றது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பானது, மாறுப்பட்ட சூழல் அமைப்பிற்கு தேவையான ஒன்றாக அமைகிறது.
  • இயற்கைத் தேர்வானது, மிகவும் வேறுப்பட்ட அமைப்புத் தன்மை கொண்ட உயிரினத் தொகையினை தேர்வு செய்யும்போது பரிணாம வளர்ச்சியானது ஏற்படக்கூடிய நிலை உருவாகின்றது.

உடைப்பு முறை

  • ஒன்றுக்கும் மேற்பட்ட உடலமைப்பு முறைகளை இயற்கை தேர்வானது அனுமதிக்கின்றது.
  • உயிரினத் தொகையை இரண்டு துணைக் கூட்டங்களாக பிரித்தால்,
  • அவ்விரு கூட்டங்களுக்கிடையில் மரபணு பரிமாற்றம் இல்லையெனில், புதிய சிற்றினங்கள் தோன்றுகின்றது.
  • ஓன்றுக்கும் மேற்பட்ட அமைப்பு ஒரு கூட்டத்தில் தோன்றினால், அவ்வமைப்பானது, பல்லுருவமைப்பு என்றழைக்கப்படுகின்றது.

பல்லுருவ அமைப்பு:

  • மரபணு திடீர் மாற்றம் போன்ற சில காரணங்களால் விளக்க முடியாத இரண்டும் மேற்ப்பட்ட அல்லீல்கள் பெருமளவில் ஒர் இயற்கை உயரினத் தொகையில் காணப்படுவது, பல்லுருவமைப்பாகும்.

      இவ்வாறு, இயற்கைத் தேர்வானது பரிணாம வளர்ச்சியில் புது சிற்றின உருவாக காரணமாக அமைகிறது.

Similar questions