தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சீர்செய்ய அரசு எடுத்துள்ள முயற்சி குறித்து குடிநீர் வடிகால் ஆணையரை நேர்காணல் செய்க.
Answers
- போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- தமிழகத்தில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது.
- இந்தநிலையில் மக்களுக்கு தங்கு, தடையின்றி நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
- இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் சென்னையில் இருந்தவாறு அனைத்து மாவட்டங்களை சேர்ந்த குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, பேசியதாவது:-
பற்றாக்குறை
திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமரி வரை தமிழகத்தில் 17 ஆறுகள் உள்ளன. இதில் தாமிர பரணியை தவிர வற்றாத ஆறுகள் எதுவும் தமிழகத்தில் இல்லை. தமிழகம் மழை மறைவு பகுதியாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழையால் பயன்பெறுவதில் இடையூறு இருக்கிறது. இதனால் தண்ணீர் வளம் தமிழகத்தில் குறைவாகவும், பற்றாக்குறையாகவும் இருக்கிறது.
போர்க்கால நடவடிக்கை
தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியம் வைத்துள்ள 1,286 கிணறுகளில் மழைக்கு முன்பும், பின்பும் நீர்ப் புவியியல் நிபுணர்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அளவிடவேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமானத்துக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் மோசமாக உள்ளது .
எனவே பொறியாளர்கள், நீர்ப்புவியியல் நிபுணர்கள், அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து தண்ணீர் வினியோகிக்கும் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி, சரியான நேரத்தில் சரியான அளவு மற்றும் தரமான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.