பின்வரும் பத்தியைப் படித்து அதன் அடியிற் காணும் வினாக்களுக்கு விடையளி.
அண்டார்ட்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில மரங்களிலும் வாழ்கின்றன. சில எலிகள் குளிர்காலம் முழுவதும்தூங்காமல் வாழ்கின்றன. எலிகள் சுண்டெலியைவிடப் பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத்திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்கள் உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல்
இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன
எலிகளுக்கு வலிமையான தாடைத் தசை உள்ளது. ஒரு ஜோடி வெட்டும் பற்கள் உள்ளன. வருடத்குற்கு 12 சென்டிமீட்டர் வீதம் வாழ்நாள் முழுதும் அவற்றின் பற்கள் வளர்த்துக்கொண்டே இருக்கும். பற்களின் மேல் உள்ள பற்பூச்சு வலிமையானது. அதனால்தான் உலோகம் போன்ற கடினப் பொருள்களையும் எலியால் எளிதாகக் கடிக்க முடிகிறது.
உலூன் பல பகுதிகளில் எலிகளைச் சாப்பிடுகிறார்கள். பெருச்சாளியில் புரதச்சத்து இருப்பதால் விரும்பி உண்கிறார்கள். வயல் பக்கம் கடைக்கும் வெள்ளை எலி அநேக மக்களால் உண்ணப்படுகிறது. எலியை உணவுக்காக வியாபாரரீதியாக வளர்கின்றனர். கானா, பிலிப்பைன்ஸ், வியத்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் எலியை உண்கின்றனர்.
வளர்ப்பு பிராணிகளுக்கும் எலி உணவாகக் கொடுக்கப்படுகிறது.
வினா:
எலிகளின் உருவத் தோற்றம் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
kya hai yeeeeeeeeeeeeeeeee
Answered by
0
எலிகளின் உருவத் தோற்றம்
- எலிகள் குளிர்காலம் முழுவதும் தூங்காமல் வாழ்கின்றன.
- எலிகள் சுண்டெலியை விட பெரியவை .
- எலிகளின் கால்கள் ஐந்து விரல்களை கொண்டுள்ளது .
- உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருக்கும் .
- முகத்தில் மீசை இருக்கும்.
- இதனால் எதிரிகளையும் உணவுகளையும் கண்டு கொள்ள உதவுகிறது.
- கடினமான மற்றும் நீளமான வால் உண்டு.
- சுமாரான பார்வைத் திறன் உண்டு.
- மரம் , பிளாஸ்டிக் , அலுமினியம் ,காரீயம் , தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்கு கூர்மையான பற்கள் உண்டு.
- வாழும் சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும்.
- எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல் இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன.
Similar questions