செம்மை நெல் சாகுபடி கோட்பாடுகள்
யாவை?
Answers
Answer:
எஸ்.ஆர்.ஐ(SRI) என்ற திருந்திய நெல் சாகுபடி முறை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஹென்றி டி லலானே என்ற கிறிஸ்துவப் பாதிரியாரின் முயற்சியால் மடகாஸ்கர் நாட்டில் நடைமுறை ஆராய்ச்சிகளுக்கு அப்பால் உருவான சாகுபடி முறையாகும்.மடகாஸ்கரில் உள்ள ஏழை நெல் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்றால் குறைந்த இடுபொருள் செலவில் நெல் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொண்டாற்றிய பாதிரியார் சுமார் முப்பது ஆண்டுகள் நுணுக்கமாக கவனித்து, உழைத்து உருவாக்கியதுதான் எஸ்.ஆர்.ஐ.நெல் சாகுபடி முறையாகும்.
திருந்திய நெல் சாகுபடி குறித்த கோட்பாடுகள் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி குறித்த கோட்பாடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்கள் இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டள்ளது