காடாக இருந்த இடங்களை வேளாண்
நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன
வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய
பெருமைகளுக்கு உரிய சோழ அரசன்
யார்?
அ) கரிகாலன்
ஆ) முதலாம் இராஜராஜன்
இ) குலோத்துங்கன்
ஈ) முதலாம் இராஜேந்திரன்
Answers
Answered by
0
கரிகாலன்
- சோழர்கள் உறையூர் என்னும் பகுதியை தலைநகரமாக கொண்டவர்கள்.
- மேலும் இவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியையும் காவேரி வடிநிலப்பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள்.
- இவர்களது துறைமுகமானது காவேரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்னும் காவேரிப் பூம்பட்டிணம் ஆகும்.
- பட்டினப்பாலை என்னும் நெடிய நூலில் காவேரிப் பூம்பட்டிணம் பற்றி கடியலூர் உத்திரக்கண்ணனார் என்ற சங்க புலவர் பாடலை பாடியுள்ளார்.
- காவேரிப்பூம்பட்டிணத்தில் சிறந்த வணிகம் நடைபெறுகிறது என்பதை சிலப்பதிகாரம் பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இவ்வாறு சிறந்து விளங்கும் சோழ மன்னர்களுள் மிக சிறந்தவராக போற்றப்படுபவர் கரிகால சோழன்.
- இவர் பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செழிப்பதற்காக தேவையான நீர்ப்பாசன வசதிகளை காவேரி ஆற்றின் நீர் பெருக்கத்தை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்தி விவசாயத்தை செழிக்க வைத்த பெருமையை சேர்த்தவர்.
Similar questions