சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
Answers
Answer:
சூழ்நிலை மண்டலம் என்பது ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள், அங்கே காணப்படக்கூடிய உயிரற்றக் காரணிகளுடன் இணைந்து வாழ்தல் ஆகும்.
சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பு தொகு
சூழ்நிலை மண்டலத்தில் 2 காரணிகள் உள்ளன[1].
உயிரற்றக் காரணிகள் தொகு
நீர், மண், காற்று, சூரிய ஒளி, வெப்பம், தாதுப்பொருட்கள், கரிமப் பொருட்கள் ஆகியவை உயிரற்றக் ககாரணிகள் ஆகும்.
உயிர்க் காரணிகள் தொகு
இவை உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
உற்பத்தியாளர்கள் தொகு
நீர், நில வாழ் தாவரங்கள் மற்றும் தாவர மிதவை உயிரினங்கள் ஆகியவை உற்பத்தியாளர்கள் ஆகும்.
நுகர்வோர்கள் தொகு
முதல்நிலைநுகர்வோர்கள் தொகு
தாவரங்களை உண்ணக்கூடிய விலங்குகள் மற்றும் விலங்கு மிதவை உயிரிகள் முதல்நிலைநுகர்வோர்கள் ஆகும். எ.கா: மான்கள், சிறிய மீன்கள்.
இரண்டாம்நிலை நுகர்வோர்கள் தொகு
தாவரஉண்ணிகளை உண்ணக்கூடிய தவளை, ஓநாய் போன்ற உயிரினங்கள் இரண்டாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.
மூன்றாம்நிலை நுகர்வோர்கள் தொகு
இரண்டாம்நிலை நுகர்வோர்களை உண்ணக்கூடிய மாமிச உண்ணிகளான கழுகு, சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் மூன்றாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.
சிதைப்பவைகள் தொகு
இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலங்களை சிதைத்து அழிக்கக்கூடிய பாக்டீரியா, காளான் போன்ற நுண்ணுயிரிகள் சிதைப்பவைகள் ஆகும்[2].
சான்றாதாரங்கள்
சூழ்நிலை மண்டலம்:
- பல்வேறு உயிரினங்களின் தொகுதி “சூழ்நிலை மண்டலம்” ஆகும்.
- இம்மண்டலத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
- அனைத்து உயிரினங்களையும் சிறியது அல்லது பெரியனவையாக இருந்தாலும் அவையின் அமைப்பிற்க் ஏற்ப்பவும், இனத்திற்க் ஏற்ப்பவும் வகைப் படுத்தப்படுகின்றது.
- சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோலம் வரை (எ.கா. விவசாய நிலம், வணச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.
- நாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு நிலங்கள், நீர்கள், தாவரங்ககள், விவசாயத்திற்கு ஏதுவான நிலத்தின் அமைப்பு என பல வகைச் சூழல்களைக் கொண்டு இருக்கும்.