பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
Answers
Answer:
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.
பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. அரிதாக இது எதிர்கால பெறுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது இந்த செயற்பாடுகளை நிறைவேற்றும் எந்தவொரு பொருளும் அல்லது சரிபார்க்கக்கூடிய பதிவும் பணமாக கருதப்படுகிறது. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெறுமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.[4]
ஒரு நாட்டின் பண வழங்கல் நாணயங்களும் (வங்கித்தாள்கள் மற்றும் காசுகள்) வங்கிப் பணமும் (வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள மீதத்தொகை) சேர்ந்ததாகும். பெரும்பாலும் பதிவுகளில் உள்ள வங்கிப் பணம் (பெரும்பான்மையான வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன), வளர்ந்த நாடுகளின் பண வழங்கலில் பெரும்பங்காக உள்ளன.
பணத்தின்செயல்பாடுகள் :
- பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கலுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் ஏற்கப்பட வேண்டும் .
பண - பரிமாற்ற ஊடகம்
- ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.
பணம் - கணக்கு அலகு
- ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருட்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினை கணக்திடுவதில் பணம் பொதுவான தரப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
- நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
- பணம் மதிப்பீட்டினை சேமித்தல் மற்றும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுதல் .
- பணத்தினை சேமிப்பதின் மூலம் எதிர்காலத்துக்கான பொருளை வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.