இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி.
Answers
Answer:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்திய நாடாளுமன்றம் இரு அவைகளை உடையது. ஒன்று அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்ற மக்களவை. இந்த அவைக்கு 543 உறுப்பினர்களை, தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மற்றொன்று மாநிலங்களவை. இதன் உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மாநிலங்களவையின் ஆயுள் காலம் எப்போதும் முடிவடைவதில்லை. சுழற்சி முறையில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அப்போது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த இரு அவைகளை உடைய நாடாளுமன்றமே இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேராக இருக்கிறது. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பரந்து விரிந்திருக்கும் அரசினை தீர்மானிப்பதற்கான மக்களின் உரிமை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள ஒரே ஒரு உரிமையில்தான் நிலைகொண்டிருக்கிறது.
இந்திய தேர்தல் முறை
- இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தல் முறையை பின்பற்றி நடைபெறுகிறது.
- மக்களாட்சி நடைபெறும் மிகப் பெரிய நாடு இந்திய நாடு ஆகும்
- மக்களின் வாக்களிப்பு மூலம் இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவில் இரண்டு வகைகளான தேர்தல்கள் நடைபெறுகின்றன.
வகை
- நேரடி தேர்தல்கள்
- மறைமுகத் தேர்தல்கள்
- நேரடி தேர்தல் என்பது தனக்கு விருப்பமான பிரதிநிதிகளை நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள் 18 வயது பூர்த்தி அடைந்த ஒரு தனிநபர் தனது விருப்பமான பிரதிநிதிகளை தேர்வு செய்கிறார் .
உதாரணமாக
- ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களை தேர்ந்தெடுப்பது.