பல்லவர் கால ச் சிற்பக்கலைக்குச் சிறந்த சா ன்று ___________
Answers
Answered by
8
பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று ;
அ) மாமல்லபுரம்
- கல், உலோகம், செங்கல், மரம் போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை எனலாம்.
- சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள் , புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
- பல்லவர்கள் காலத்தில் சிற்பங்கள் சுதைகளினாலும், கருங்கற்களினாலும் செய்யப்பட்டன. பல்லவர்கள் காலச் சிற்பக் கலைக்கு மாமல்லபுரம் சிற்பங்கள் சிறந்த சான்று ஆகும். மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள பெரும் பாறைகளை செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இங்கு உருவாக்கப்பட்ட பாண்டவர் ரதத்தில் பல சிற்பங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் சிற்பங்களும் காணப்படுகின்றன.
- மாமல்லபுரம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை சிற்பங்களும் பல்லவர்களின் சிற்பக்கலைக்கு சிறந்த சான்றுகள் ஆகும்.
Answered by
1
Answer:
மாமல்லபுரம்
Explanation:
Similar questions