India Languages, asked by tamilhelp, 11 months ago

மரவே ர் என்பது ________ புணர்ச்சி

Answers

Answered by steffiaspinno
14

மரவேர் என்பது கெடுத‌ல் ‌விகார பு‌ண‌ர்‌ச்‌‌சி.

  • முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
  • பு‌ண‌ர்‌ச்‌‌சி இரு வகை‌ப்படு‌ம். அவை இய‌ல்பு பு‌ண‌ர்‌ச்‌சி, ‌விகார‌ப் பு‌ண‌ர்‌ச்‌சி ஆகும்.
  • பு‌ண‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது எ‌ந்த‌வித மா‌ற்றமு‌‌ம் ‌நிகழாம‌ல் இய‌ல்பா‌ய் ‌நிக‌ழ்‌ந்தா‌ல் அது இய‌ல்பு புண‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.  (எ‌.கா) வாழை + மர‌ம் = வாழை மர‌ம்
  • பு‌ண‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது ஏதாவது மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் அது ‌விகார‌ப்புண‌ர்‌ச்‌‌சி எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம்.
  • இந்த மா‌ற்ற‌ங்‌க‌ள் மூ‌ன்று வகை‌ப்படு‌ம். அவை தோ‌ன்ற‌ல், ‌தி‌ரித‌ல், கெடுத‌ல் எ‌ன்பன ஆகு‌ம்.
  • தாே‌ன்ற‌ல்   வாழை + கா‌ய் = வாழை‌‌க்கா‌ய்
  • ‌தி‌‌ரித‌ல்     ப‌‌ல்+பசை = ப‌ற்பசை
  • கெடுத‌ல்    மர‌ம்+வே‌ர் = மரவே‌ர்
  • எனவே மரவே‌ர் எ‌ன்பது கெடுத‌ல் ‌விகார பு‌ண‌ர்‌ச்‌‌சி ஆகு‌ம்.  

Answered by Apostleabhijeet
7

Answer:

கெடுதல்

Explanation:

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]

Similar questions