அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
Answers
Answered by
9
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் யார் கனவில் யார் அதிரப் புகுந்தார் :
- ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும்.
- இத்தொகுப்பில் ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகும். நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
- திருமாலை வணங்கி சிறப்பு நிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஆகும்.
- திருமாலுக்கு பாமாலைச் சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலை சூடி மகிழ்ந்ததால் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள்.
- வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துக் கொண்டு பூமி அதிர நடந்து வருவதாக ஆண்டாள் கனவு கண்டாள்.
- அதிரப் புகுத கனாக் கண்டேன் என்ற வரியில் ஆண்டாளின் கனவில் கண்ணன் அதிரப் புகுந்தார்.
Answered by
4
ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Similar questions