India Languages, asked by hranglimjulyhri4795, 8 months ago

குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் ………. பகுதியில் உள்ளன.

Answers

Answered by steffiaspinno
0

குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் சுவாசப் பகுதியில் உள்ளன.

  • எபிதீலியம் என்பது ஒரு எளிய திசு ஆகும். இந்த எபிதீலிய திசுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் உருவானதாகும்.
  • இச்செல்கள்  ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக காணப்படுகின்றன.  
  • இந்த எபிதீலிய செல்கள், செல்கள் அற்ற  தாங்கு சவ்வின் மீது அமைந்துள்ளது. கொலாஜன் எனும் சிறப்பான அமைப்பைக் கொண்ட புரதத்தைப் பெற்றுள்ளது.
  • குறுயிழை எபிதீயம் என்பது சில தூண்  எபிதீலியங்கள் ரோமங்கள் போன்ற  மென்மையான தன்மை கொண்ட  வெளி நீட்சிகளைப்  பெற்றுள்ளது.
  • இவற்றை குறுயிழை  எபிதீலியம் என்று அழைக்கிறோம்.
  • இவற்றின் முக்கிய பணி , எபிதீலியத்தின் மீது ஒரு குறிப்பிட்ட திசையில்  துகள்கள் அல்லது  கோழைகளை நகர்த்துவது ஆகும்.
  • இது சுவாசக்குழாய், சுவாசப் பாதையின்  நுண்குழல்கள், சிறுநீரகக் குழல்கள் மற்றும்  அண்டக்குழல்களில் காணப்படுகிறது.
Similar questions