மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின்குறி உடையது.
Answers
Answered by
0
மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது.
- மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது என்பது தவறு ஆகும்.
மின்னாற் பகுப்பு
- மின்னோட்டம் எலக்ட்ரான்களினால் மட்டுமே கடத்தப்படுகிறது.
- தடிமனான தாமிர கம்பியை எடுத்து சுத்தம் செய்த பின்பு சுத்தியால் அதை நன்கு அடித்து தட்டையாக்கவும் தாமிர கம்பி மற்றும் கார்பன் தண்டை இரண்டையும் தாமிர சல்பேடு கரைசலில் அமிழ்த்தவும்.
- பின்பு கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர் மின்வாயுடன், தாமிர கம்பியை நேர் மின்வாயுடன் இணைக்கவும்.
- கார்பன் தண்டும் , தாமிர கம்பியும் அருகில் உள்ளவாறு அதே சமயம் ஒன்றை ஒன்று தொடாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
- தாமிர சல்பேட் கரைசலில் மின்னோட்டம் பாயும் பொழுது எலக்ட்ரான்கள் மற்றும் தாமிர நேர் அயனி இரண்டுமே மின்னோட்டத்தை கடத்துகிறது.
- கரைசலில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு ‘மின்னாற் பகுப்பு’ எனப்படும்.
- மின்னோட்டம் பாயும் கரைசல் ‘’மின்பகு திரவம்’’ எனப்படும்.
- கரைசலில் அமிழ்தப்படும் நேர் மின்வாய் ஆனோடு எனவும், எதிர் மின்வாய் கேதோடு எனவும் அழைக்கப்படுகிறது.
- இங்கு குறிப்பிடப்பட்ட தாமிர கம்பி ஆனோடாகவும் கார்பன் தண்டு கேதோடு எனவும் செயல்படுகிறது.
- மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது.
Similar questions