படிக வடிவமுடைய வைரம், கிராபைட் கார்பன்களை பற்றி விவரி.
Answers
Answered by
0
படிக வடிவமுடைய வைரம், கிராபைட் கார்பன்கள்:
வைரம்
- இதில் ஒவ்வொரு கார்பன் அணுவும் அதன் இணைதிறன் எலக்ட்ரான்கள் மூலம் நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந்து நான்கு சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன.
- கார்பன் அணுக்கள் யாவும் நான்முகப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் முப்பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
- இதுவே இதன் கடினத் தன்மை மற்றும் திடத்தன்மைக்கு காரணமாகும்.
கிராஃபைட்
- இதில் கிராஃபைட் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் பிணைந்துள்ளது.
- இந்த அமைப்பில் அறுங்கோண - அடுக்குகள் ஒன்றொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப் பட்டுள்ளன.
- எனவே கிராஃபைட் வைரத்தை விட மென்மையானவை.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago