India Languages, asked by Naitik7861, 1 year ago

ஃபுல்லரீன் குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

ஃபுல்லரீன் குறிப்பு:

  • இது ஒரு படிக வடிவமுடைய கார்பன் ஆகும்.
  • மிகவும் நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் ஆகும். இதன் வாய்பாடு C60.
  • இதில் 60 கார்பன் அணுக்கள் 5 மற்றும் 6 உறுப்புகளைக் கொண்ட வளையங்களாக ஒரு கால்பந்து போன்ற அமைப்பினை பெற்றுள்ளது.
  • அமெரிக்க கட்டட வடிவமைப்பாளர் பக்மின்ஸ்டர் ஃபுல்லர் பன்னாட்டு  கண்காட்சிகளுக்காக வடிவமைத்த குவிந்த மாடம் போன்ற குமிழ் கட்டடங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளதால் இது பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுகிறது.
  • இது பக்கி பந்து எனவும் அழைக்கப்படுகிறது.
  • மிகப் பெரிய ஃபுல்லரீன் குடும்பங்கள் C20, முதல் C540 வரை காணப்படுகின்றன.
Similar questions