அவன் வந்து பார்த்துச் சென்றான் - இத்தொடரில், தடித்த எழுத்துகளில் இடம்பெற்றுள்ளவை
௮) பெயரெச்சங்கள் ஆ) வினைமுற்றுகள்
இ) முற்றெச்சங்கள் ஈ) வினையெச்சங்கள்
Answers
Answered by
0
அவன் வந்து பார்த்துச் சென்றான் - வினையெச்சங்கள்
வினைச்சொல்
- வினைச்சொல் என்பது எழுவாய் செய்யும் செயலை உணர்த்துவது ஆகும். (எ.கா) இராமன் வந்தான்.
- இதில் வந்தான் என்பது வினைச்சொல் ஆகும். முற்று பெற்ற வினைச்சொல் முற்று எனவும், முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனவும் அழைக்கப்படுகிறது.
வினைமுற்று
- எழுவாயின் செயல் நிலையை காட்டி வாக்கியத்தினை முடிக்கும் சொல் அல்லது முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.
வினையெச்சம்
- முற்று பெறாத வினைக்கு எச்சம் (அ) எச்ச வினை என்று பெயர். இது வினையை கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும்.
- (எ.கா) அவன் வந்து பார்த்துச் சென்றான் என்ற தொடரில் வந்து பார்த்துச் என்ற எச்ச வினைகள் சென்றான் என்ற வினையினை கொண்டு முடிகிறது.
Similar questions