சூழல் கோட்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answers
Answered by
0
சூழல் கோட்பாடு:
சூழல் கோட்பாடு ஐந்து வகையாக உள்ளது.
ஒலிச்சூழல்
- வைகை வை கை என்ற சொற்களில் வைகை என்பது ஒரு நதியினையும், வை கை என்பது கையினை வை என்பதையும் குறிக்கும்.
உருபன் இணைப்புச் சூழல்
- (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு என்ற சொல் உடன் ஐ என்ற சொல்லை சேர்க்கும் போது சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
இலக்கணச் சூழல்
- நூலைப்படி, ஏணிப்படி என்ற சொற்களில் முறையே படி என்றச் சொல் வினை மற்றும் பெயர்ச்சொல்லாக வந்துள்ளது.
பேச்சு சூழல்
- பேச்சு சூழல் ஆனது பொருள் மயக்கம் உடைய மொழிக்கூறுகளை உடையது.
சொல் இணைப்புச் சூழல்
- ஒரு சொல்லுடன் வெவ்வேறு சொற்கள் சேரும்போது வெவ்வேறு பொருளைத் தரும்.
Similar questions