தொல்காப்பியர் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடு யாது?
Answers
Answered by
1
தொல்காப்பியர் குறிப்பிடும் பொருண்மைக் கோட்பாடு :
- பொருண்மையியல் என்பது சொற்களின் பொருட்களை விளக்கிற ஒரு வகை இயல் ஆகும்.
- மொழிக்கூறுகள் பெற்றுள்ள பொருண்மைத் தன்மையினை அகராதிப் பொருள், இலக்கணப் பொருள், உணர்வுப் பொருள், பயன்பாட்டுப் பொருள், மற்றும் சூழற்பொருள் என பலவகையாக பிரிக்கலாம்.
- தமிழில் உள்ள மிகவும் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் ஆனது.
- எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (அனைத்து சொற்களும் பொருள் உடையவை) எனவும், பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும் சொல்லினாகும் எனவும் கூறுகிறது.
- அதாவது ஒரு சொல் ஆனது தனக்குரிய பொருளினையும், தான் குறிப்பிடும் வேறு பொருளினையும் குறிக்கும். அந்த சொல்லானது சூழலின் அடிப்படையில் வெளிப்படையாகவும் மற்றும் குறிப்பாகவும் உணர்த்தும்.
Similar questions